FTX சாம் பேங்க்மேன் கைது.. 10 பில்லியன் டாலர்.. ரகசிய கணக்கு..!

'அடுத்த வாரன் பபெட்' எனப் புகழும் அளவிற்கு FTX நிறுவனர் சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் முதலீட்டு உலகில் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு வந்தார், ஆனால் FTX நிறுவனத்தில் செய்த குளறுபடிக்காகத் தற்போது பஹாமாஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சாம் பேங்க்மேன்-ஃபிரைட் உருவாக்கிய FTX நிறுவனம் உலகின் 2வது பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமாக உயர்ந்த நிலையில் கடந்த மாதம் திவாலானதாக அறிவிக்கும் அளவிற்கு மோசமான நிலைக்குச் சென்றது.

இந்த நிலையில் அமெரிக்க வழக்குரைஞர்களால் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் திங்கட்கிழமை பஹாமாஸில் கைது செய்யப்பட்டார்.

சாம் பேங்க்மேன்-ஃபிரைட்

சாம் பேங்க்மேன்-ஃபிரைட்

FTX நிறுவனத்தின் நிறுவனரான சாம் பேங்க்மேன்-ஃபிரைட் 2017ல் உருவாக்கிய Alameda Research என்னும் நிறுவனத்திற்கு FTX கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் இருந்து சாம் பேங்க்மேன்-ஃபிரைட் ரகசியமாக வாடிக்கையாளர்களின் சுமார் 10 பில்லியன் டாலர் தொகையை ரகசியமாகத் தனது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றிய காரணத்தால் தான் FTX நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.

10 பில்லியன் டாலர் திருட்டு

10 பில்லியன் டாலர் திருட்டு

10 பில்லியன் டாலர் அளவிலான தொகை இல்லை என்றாலும் குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் ரகசிய கணக்கிற்கு மாற்றியிருக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டு இதற்கான ஆதாரங்கள் சில கிடைத்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சாம் பேங்க்மேன்-ஃபிரைட் எப்படிக் கைது செய்யப்பட்டார் தெரியுமா..?

நிதிக் குற்றங்கள்

நிதிக் குற்றங்கள்

அமெரிக்காவின் சட்டங்களுக்கு எதிரான பல்வேறு நிதிக் குற்றங்களைச் செய்த காரணத்தால் FTX நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் சிஇஓ-வுமான சாம் பேங்க்மேன்-ஃபிரைட் கைது செய்யப்பட்டார். மேலும் சாம் பேங்க்மேன் செய்தது காமன்வெல்த் ஆஃப் தி பஹாமாஸின் சட்டங்களுக்கு எதிரான குற்றங்களாகும் என்று அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பஹாமாஸ்

பஹாமாஸ்

சாம் பாங்க்மேன்-ஃபிரைடுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முறையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்க் கைது செய்யப்படும் நடவடிக்கையைத் தொடர்ந்ததாகப் பஹாமாஸின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கூறியது.

அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு

மேலும் இந்தக் கைதுக்குப் பின்பு சாம் பாங்க்மேன்-ஃபிரைடு அமெரிக்க அரசின் காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் கைது செய்யப்பட்டார் என்றும், மேலும் அவர் நாசாவின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனச் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியாகியுள்ளது.

திங்கள்கிழமை கைது

திங்கள்கிழமை கைது

பஹாமாஸ் காவல்துறையின் அறிக்கையில், திங்கள்கிழமை மாலை 6:00 மணிக்குப் பிறகு (2300 GMT) பஹாமாஸில் உள்ள அல்பானி, Nassau-வில் அமைந்துள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் பாங்க்மேன்-ஃபிரைட் கைது செய்யப்பட்டதாகக் கூறியது.

FTX நிறுவனம்

FTX நிறுவனம்

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளங்களில் ஒன்றாக விளங்கும் FTX நிறுவனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியின் மூலம் கடந்த இவருடைய சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 26.5 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. ஆனால் கடந்த வாரம் ஒரு பேட்டியில் தனது வங்கி கணக்கில் வெறும் 100000 டாலர் மட்டுமே இருப்பதாக 30 வயதான தொழிலதிபர் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் கூறினார்.

நவம்பர் 11 திவால்

நவம்பர் 11 திவால்

2019 இல் தொடங்கப்பட்ட FTX நிறுவனம் பஹாமாஸ்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நிலையில் நவம்பர் 11 அன்று அமெரிக்காவில் இந்நிறுவனம் திவாலானது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுமட்டும் அல்லாமல் FTX நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த சாம் பேங்க்மேன்-ஃபிரைட் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மக்கள் கதறல்

மக்கள் கதறல்

FTX நிறுவனத்தைக் காப்பாற்ற போதுமான நிதியைத் திரட்ட முடியாத காரணத்தால் நிறுவனம் திவாலானது, ஆனால் இந்த நிலைக்குத் தள்ளப்பட முக்கியமான காரணம் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் செய்த தவறுகள் தான். இந்த நிலையில் திவாலான FTX நிறுவனத்தின் வர்த்தகத் தளத்தில் இருந்த 6 பில்லியன் டாலரை திரும்பப் பெற முயற்சித்த நிலையில் மக்கள் தோல்வி அடைந்தனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+