இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தும் அளவு 2வது மாதமாகக் குறைந்து 5 மாத சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டு அளவு லாக்டவுன் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படாத செப்டம்பர் மாத நிலையை அடைந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு குறைந்துள்ளது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சரிவடைந்து வருகிறது என்பதற்கான ஒரு சிக்னலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலைக்கு என்ன காரணம்..?!
இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு சரிவு
உலகின் 3வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் பயன்பாட்டு நாடாக விளக்கும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்டு உள்ள அதீத விலை உயர்வின் காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் முதல் வர்த்தகப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாகப் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டு அளவு பெரிய அளவில் குறைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு
பிப்ரவரி மாதம் மட்டும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டு அளவு 4.9 சதவீதம் குறைந்து 17.2 மில்லியன் டன் ஆகக் குறைந்துள்ளது எனப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் PPAC அமைப்பு தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 2 மாதமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு இந்தியாவில் சராசரியாக 4.6 சதவீதம் சரிந்து வருகிறது.
கொரோனா பீதி
இந்த நிலை மாறுவதற்குப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வேண்டும் இல்லையெனில் கொரோனா தொற்று எண்ணிக்கை முழுமையாகக் குறைய வேண்டும். இன்னும் பல கோடி மக்கள் கொரோனா பீதியின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறவே பயந்து வருகிறார்கள் என Refinitiv ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள்
மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஏப்ரல் மாதமும் உற்பத்தி அளவீட்டை உயர்த்த மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயரும் நிலை உள்ளது, இதேவேளையில் சவுதி கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளத்தில் ஏமன் ஹவுத்திகள் தாக்குதல் நடத்திய காரணத்தால் சவுதி மூலம் சர்வதேசச் சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் அளவீடும் பாதிக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
மத்திய அரசு இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கடந்த 13 நாட்களாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் மாறியிருக்கும் நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்துள்ளது.
கொரோனா தொற்று
இந்நிலையில் நாட்டின் வளர்ச்சியைப் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அல்லாமல் கொரோனா தொற்றும் பாதித்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications