வட்டி உயர்த்த நேரம் வந்தாச்சு.. ரிசர்வ் வங்கி-க்கு கிடைத்த வாய்ப்பு..!

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அனைத்தும் பணவீக்கம் மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தது.

இந்த நிலையில் தான் நாட்டின் பணவீக்கம் மற்றும் வர்த்தகத்திற்குப் பெரும் சுமையாக இருந்த எரிபொருள் விலையை மத்திய அரசு அதிகளவில் குறைத்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கிக்கு வட்டியை உயர்த்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம்

இந்தியப் பொருளாதாரம் அதிகப்படியான பணப்புழக்கத்தில் இயங்கி வரும் காரணத்தால் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி நிலையாக இல்லை, இதேபோல் எரிபொருள், எரிவாயு, சமையல் எண்ணெய், காய்கறி, உணவுப் பொருட்களின் விலை அதிகமாகவும் உள்ளது. இதனால் பணவீக்கத்தின் அளவுகள் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்தது.

எரிபொருள் விலை

எரிபொருள் விலை

இந்நிலையில் எரிபொருள் விலை குறைந்த காரணத்தால் அனைத்து உற்பத்தி பொருட்கள் முதல் விற்பனை பொருட்கள் வரையில் அனைத்தும் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் வர்த்தகச் சந்தையைக் கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

உற்பத்தி மற்றும் விற்பனை பொருட்கள்

உற்பத்தி மற்றும் விற்பனை பொருட்கள்

எரிபொருள் விலையால் அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையும் உயரும். உதாரணமாக அனைத்து உற்பத்தி பொருட்களும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குத் தான் செல்ல வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்திற்கு அதிகப்படியான தொகையைச் செலவிட வேண்டி உள்ளது.

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்


அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் கடந்த வாரம் பணப்புழக்கத்தைக் குறைக்கப் பத்திர கொள்முதல் அளவீட்டைக் குறைத்தது. இதனால் அந்நாட்டில் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்றால் மிகையில்லை.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன், ஆகிய அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். இதேபோல் வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளவர்களின் வட்டி வருமானம் உயரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+