தொடர்ந்து எகிறி வரும் எரிபொருள் விலை.. சரக்கு போக்குவரத்து கட்டணம் 20% வரை அதிகரிக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரத்தில் எரிபொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.

 

அதிலும் டீசல் விலையாந்து கடந்த மாதத்தில் 23 நாட்கள் அதிகரித்தது.

டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில் சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணம் அதிகரிக்கலாம்

கட்டணம் அதிகரிக்கலாம்

இது குறித்து லாரி அமைப்பானது ஞாயிற்றுகிழமையன்று எச்சரித்துள்ளது. அதாவது எரிபொருள் விலையானது தினசரி உயர்ந்து வருவதால், போக்குவரத்து கட்டணத்தினை 20 சதவீதம் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏனெனில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையில் இது மேலும் அழுத்தத்தினை உருவாக்கியுள்ளது.

டிரக் செலவு

டிரக் செலவு

ஒரு டிரக்கின் இயக்க செலவில் 65 சதவீதம் எரிபொருள் கட்டணமாகும். இதனையடுத்து டோல் கட்டணங்கள் அதிகளவிலான செலவினங்களாக உள்ளது. இது இயக்க செலவில் 20 சதவீதமாகும். ஏற்கனவே தேவை குறைவாக உள்ளது. வாகனகளின் செயலற்ற நிலை 55% ஆகும். தற்போது சரக்கு வண்டிகள் தங்களது செயல்பாடுகளை தக்கவைத்துக் கொள்வது கடினமாகிவிட்டது.

போக்குவரத்து முடக்கம்
 

போக்குவரத்து முடக்கம்

கொரோனாவின் தாக்கத்தினால் நாடு முழுவதும் பூட்டப்பட்டிருந்த நிலையில், சாலை போக்குவரத்து பேரழிவிற்கு உட்பட்டுள்ளது என்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸின் (AIMTC) தலைமை குழுவின் தலைவர் பால் மல்கித் சிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கட்டணத்தினை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை

கட்டணத்தினை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை

டிரக் ஒட்டுனர்களின் பிழைப்புக்கு சரக்கு போக்குவரத்து கட்டணம் மிக அவசியம். ஏனெனில் லாரிகளை நஷ்டத்தில் இயக்குவது முடியாது. இதனால் லாரிகளுக்கு அதிகரித்த கட்டணத்தினை நுகர்வோருக்கு அதிகரிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நீண்டகாலத்திற்கு இது சாத்தியமில்லை. தற்போது இந்த வணிகத்தினை தக்கவைத்துக் கொள்ள 20 சதவீதம் சரக்கு கட்டண உயர்வு அவசியம் என்றும் பால் மல்கித் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் இழப்புகள்

அதிகரித்து வரும் இழப்புகள்

தொடர் எரிபொருள் விலையேற்றத்தால், இயக்க செலவுகளை மீட்டெடுப்பது கடினமாகி வருவதாகவும் அவர் கூறினார். டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இது ஏற்கனவே இயக்க செலவினை 20 -25% அதிகரித்துள்ளது என்று பால் மல்கித் தெரிவித்துள்ளது. கடைசியாக கடந்த ஜூலை 17 அன்று டீசல் விலை மேற்கொள்ளப்பட்டது.

அதிகரிக்கும் செலவினங்கள்

அதிகரிக்கும் செலவினங்கள்

கடந்த ஜூன் 7 லிருந்து, 29 வரை டீசல் விலை லிட்டருக்கு 11.79 ரூபாய் அதிகரித்தது. இதனை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக கலால் வரியும் அதிகரிக்கப்பட்டது.

தற்போது எரிபொருள் கட்டணங்கள் தவிர, மதிப்பு கூட்டப்பட்ட வரி நிகழ்வுகளைப் பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. டீசல் மற்றும் சுங்கச் சாவடிகள் தவிர, பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் டயர்கள், எண்ணெய் மற்றும் மனித சக்தி ஆகியவை டிரக் நடவடிக்கையில் இன்னும் செலவினத்தினை கூட்டுகின்றன.

ஓட்டுனர்கள் கட்டணமும் அதிகரிப்பு

ஓட்டுனர்கள் கட்டணமும் அதிகரிப்பு

இதோடு டிரைவர் மட்டும் ஆள் பற்றாக்குறையால் செலவினங்கள் இன்னும் அதிகரித்துள்ளது. ஏனெனில் ஒட்டுனர்கள் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் கட்டணங்களும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பால் மல்கித் தெரிவித்துள்ளார்.

அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

மேலும் அரசு டிரக் துறையில் ஏற்பட்டுள்ள அழுத்தினை அரசு தலையிட்டு தீர்க்க வேண்டும். இத்துறைக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மேலும் இது கமாடிட்டிகளின் விலையினை ஏற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

உண்மையில் சரக்கு வாகனங்களின் கட்டணம் அதிகரிக்கும்போது, இது அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிக்க வழிவகுக்கும். இது ஏற்கனவே கொரோனாவால் சீரழிந்து வரும் மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசு நிச்சயம் இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fuel prices hike may increase freight charges by 20%

Fuel price impact.. Fuel prices hike may increase freight charges by 20%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X