இந்தியாவில் மே மாதத்தில் மட்டும் கடந்த 13 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 7 முறை அதிகரித்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர், குறிப்பாக உணவுப் பொருட்கள், காய்கறி, பழங்களின் விலை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் லாக்டவுன் இருந்தாலும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் காரணத்தால் பெட்ரோல், டீசல் விலை மக்களை மறைமுகமாகப் பாதிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தால் நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் தான் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை நிலவரம்
இதன் மூலம் ரீடைல் விற்பனையகத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் சென்னையில் 93.84 ரூபாயாகவும், டெல்லியில் 92.05 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 92.16 ரூபாயாகவும், மும்பையில் 98.36 ரூபாயாகவும், பெங்களூரில் 95.11 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 95.67 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் கடந்த 7 நாட்களில் பெட்ரோல் விலை சராசரியாக 1.65 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
டீசல் விலை நிலவரம்
இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் 87.49 ரூபாயாகவும், டெல்லியில் 82.61 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 85.45 ரூபாயாகவும், மும்பையில் 89.75 ரூபாயாகவும், பெங்களூரில் 87.57 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 90.06 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் கடந்த 7 நாட்களில் டீசல் விலை சராசரியாக 1.88 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் மீதான வரி
மேலும் பெட்ரோல் மீது எவ்வளவு விதிக்கப்படுகிறது தெரியுமா..? ஐஓசிஎல் நிறுவன கணக்கின் படி மே 1ஆம் தேதி
ஒரு லிட்டர் பெட்ரோல்-ன் அடிப்படை விலை: 32.61 ரூபாய்
போக்குவரத்துக் கட்டணம் : 0.28 பைசா
கலால் வரி : 32.90 ரூபாய் (மத்திய அரசின் வரி)
டீலர் கமிஷன்: 3.75 ரூபாய்
மதிப்பு கூட்டு வரி: 20.86 ரூபாய் (மாநில அரசின் வரி)
ஆக மொத்தம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை : 90.40 ரூபாய்
டீசல் மீதான வரி
இதேபோல் டீசல் மீது ஐஓசிஎல் நிறுவன கணக்கிடும் வரி அளவீடுகள். மே 1ஆம் தேதி விலை நிலவரத்தின் படி கணக்கிடப்பட்டு உள்ளது.
ஒரு லிட்டர் டீசல்-ன் அடிப்படை விலை: 34.27 ரூபாய்
போக்குவரத்துக் கட்டணம் : 0.25 பைசா
கலால் வரி : 31.80 ரூபாய் (மத்திய அரசின் வரி)
டீலர் கமிஷன்: 2.58 ரூபாய்
மதிப்பு கூட்டு வரி: 11.83 ரூபாய் (மாநில அரசின் வரி)
ஆக மொத்தம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை : 80.73 ரூபாய்
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications