கொரோனா வந்தாலும் வந்தது மாடி வீட்டு அம்பானி முதல் ரோட்டுக்கடை முனுசாமி வரை பதம் பார்த்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
இது இன்னும் மக்களை வாட்டி வதைக்கும் விதமாக இன்றோடு 12 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இனி வண்டி வாகனங்களில் வேலைக்கு செல்லும் சாமனியர்களின் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லை. ஏனெனில் லிட்டருக்கு 6 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், மாதம் இதற்கென கூடுதலாக ஒரு தொகையினை செலவிட வேண்டியிருக்கும்.
கச்சா எண்ணெய் விலை
இதில் வேடிக்கை என்னவெனில் பெட்ரோல் விலையானது 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டுள்ளது. கடந்த மாதத்தில் கொரோனாவின் காரணமாக முடங்கி போன சர்வதேச நாடுகளால் கச்சா எண்ணெய் விலையானது மைனஸில் சென்று பின் ஏற்றம் கண்டது.
விலை அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் காரணத்தால் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீண்டும் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு கிட்டதட்ட 40 டாலர்களை தொட்டுள்ளது.
என்ன காரணம்?
இதனால் கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்க இது காரணமாக அமைந்தது. இன்னும் இதனை தெளிவாக சொல்ல வேண்டுமெனில் கச்சா எண்ணெய் தேவையானது குறைந்த நிலையில், உற்பத்தியும் குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது தேவையும் அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கிடு கிடுவென ஏற்றம்
கச்சா எண்ணெய் விலையானது அந்தளவு மைனஸில் சென்ற போது கூட, எரிபொருள் விலைகள் குறையவில்லை. இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காண ஆரம்பித்த நிலையில், பெட்ரோல் டீசல் விலையானது கிடு கிடுவென ஏற்றம் கண்டு கொண்டு இருக்கிறது.
கடந்த 12 நாட்களில் டீசல் விலையானது 7.04 ரூபாயும், இதே பெட்ரோல் விலையானது 6.55 ரூபாயும் ஏற்றம் கண்டுள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
டெல்லியில் பெட்ரோல் விலையானது 77.81 ரூபாயாகவும், டீசல் விலையானது 76.43 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே குர்கானில் பெட்ரோல் விலையானது 76.24 ரூபாயாகவும், டீசல் விலையானது 69.08 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலையானது 81.32 ரூபாயாகவும், டீசல் விலையானது 74.70 ரூபாயாகவும் உள்ளது.
மும்பையில் பெட்ரோல் விலையானது 84.66 ரூபாயாகவும், டீசல் விலையானது 74.93 ரூபாயாகவும் உள்ளது.
ஹைத்ராபாத்தில் பெட்ரோல் விலையானது 80.77 ரூபாயாகவும், டீசல் விலையானது 74.70 ரூபாயாகவும் உள்ளது.
பெங்களுவில் பெட்ரோல் விலையானது 80.33 ரூபாயாகவும், டீசல் விலையானது 72.68 ரூபாயாகவும் உள்ளது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications