சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதில் இருந்து நிலைபெற்று உள்ள போதிலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வலிமை அடைந்து வரும் நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தேர்தல் காரணமாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கொரோனா தொற்றால் மக்கள் படும் கஷ்டங்களுக்கு மத்தியில் கூடுதல் சுமையாகப் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மே 4ஆம் தேதி முதல், அதாவது 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த நிலையில், இன்றும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 0.24 பைசா உயர்ந்து 93.62 ரூபாய்க்கும், டீசல் விலை 29 பைசா உயர்ந்து 87.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலையில் இன்றைய விலை அதிகரிப்பு மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91.80 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 91.92 ரூபாயாகவும், மும்பையில் 98.12 ரூபாயாகவும், பெங்களூரில் 94.85 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 95.41 ரூபாயாகவும் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் மோசம்
இன்றைய விலை உயர்வின் மூலம் நாட்டின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் அதிகப்படியாகச் சாதாரணப் பெட்ரோல் விலை 98.12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ப்ரீமியம் பெட்ரோல் விலை 100ஐ கடந்துள்ளது. தற்போது இருக்கும், எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்தால் அடுத்த ஒரு வாரத்திற்குள் மும்பையில் சாதாரணப் பெட்ரோல் கூட 100ஐ கடந்துவிடும்.
டீசல் விலை
இதைத் தொடர்ந்து நாட்டின் முக்கியமான நகரங்களில் டீசல் விலை 29 முதல் 32 பைசா வரையில் உயர்ந்துள்ளதன் வாயிலாக ஒரு லிட்டர் டீசல் விலை 82.36 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 85.20 ரூபாயாகவும், மும்பையில் 89.48 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 89.79 ரூபாயாகவும், பெங்களூரில் 87.31 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications