நீரவ் மோடி இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபராகவும், வைர வியாபாரத்தில் கொடிக்கட்டி பறந்தார். ஆனால் அளவுக்கு அதிகமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனை மிகப் பெரிய மோசடியில் வாங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் நாட்டை விட்டு ஓடினார். இதன் பின்பு பிஎன்பி மோசடி என அழைக்கப்பட்ட இந்த மோசடி 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.
நீரவ் மோடியின் சரிவு விலை உயர்ந்த வைர நகைகளுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தவர் நீரவ் மோடி. பல நாடுகளில் அவரது நீரவ் மோடி லிமிடெட் கிளைகளை வைத்து கொண்டு டிசைனர் வைர நகைகளை விற்பனை செய்து வந்தார் நீரவ் மோடி.

பிஎன்பி மோசடி என்பது நீரவ் மோடி நிறுவனங்களுக்கு எந்தவித நில உத்தரவாதமோ அல்லது உரிய நடைமுறையைச் செய்யாமலோ பிஎன்பி வங்கி அதிகாரிகள் வங்கி உத்தரவாதக் கடிதத்தை வழங்கினர். இதை வைத்து வெளிநாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் பெற்றார் நீரவ் மோடி.
இந்த மோசடி வங்கி உத்தரவாத கடிதங்கள் வங்கியின் ஆவணங்களில் இடம் பெற வில்லை. இதனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்த நிதி மோசடி யாருக்கும் தெரிய வரவில்லை. பிஎன்பி மோசடியில் சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் கையாடப்பட்டிருந்தது.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டுத் தப்பியோடினார் நீரவ் மோடி. அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கும் முன்னரே மோடி தப்பியோடி விட்டார். ஆனால் அவர் மீது பல நாடுகளில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இங்கிலாந்தில் அவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் இருந்து நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்தியாவில் அவர் மீதான சட்ட நடவடிக்கை காத்திருந்தது. இந்த வழக்கில் பலமுறை விசாரணை நடைபெற்றது. வங்கி விதிமுறைகள் தொடர்பான சிக்கல்களை பிஎன்பி மோசடி வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இதைத் தொடர்ந்து வங்கி விதிகளை கூடுதலாக பரிசீலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் எதிர்காலத்தில் வங்கி மோசடிகளைத் தடுக்க வழி செய்யப்பட்டது.
ஒரு காலத்தில் பேர் போன வைர நகை வியாபாரியாக இருந்த நீரவ் மோடியின் நிலைமை இப்போது பரிதாபமாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மிகப் பெரிய நிதி மோசடியில் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அண்மையில் வெளியான தகவல் படி நீரவ் மோடியின் பயர்ஸ்டார் டயமண்ட் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடட்டின் பண இருப்பு ரூ.236. கோடக் மகிந்திரா வங்கியில் இருந்த அவரது பணம் ரூ.2.46 கோடியை அவரது வருமான வரி நிலுவைக்காக மாற்றம் செய்தனர். யூனியன் பேங்க் ஆப் இந்தியாவும் பேங்க் ஆப் மகாராஷ்டிராவும் நிலுவையிலிருந்த தொகையில் ஒரு பகுதியை மட்டுமே மாற்றின.
ஆன்ட்வெர்ப் வைர வியாபாரத்தின் நங்கூரமாக உள்ள ஐரோப்பாவில் வளர்ந்த மூன்றாம் தலைமுறை வைர வியாபாரி நீரவ் மோடி. இப்போது ஐரோப்பாவில் நெருக்கடி நிறைந்த சிறையில் மோடி தன் காலத்தை கழித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications