ஈரானின் Qeshm தீவில் இருந்த டெலிகாம் டவர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஈரான் கடந்த வாரம் முழுக்க பஹ்ரைனில் தொடர்ந்து பெரும் தாக்குதலை நடத்தியிருந்தது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், ரேடார் அமைப்புகள் மீது ஈரான் இரண்டு முறை தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலையில் ஈரானின் தெற்கு பகுதியில் இருக்கும் பந்தர் லெங்கே மற்றும் சிரிக் பகுதிகளில் இருக்கும் ஈரான் ராணுவத்திற்குச் சொந்தமான ஏவுகணை ஏவு தளங்களை அமெரிக்கா தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மீண்டும் ஈரான் - அமெரிக்கா மத்தியில் பெரும் போர் வெடிக்கும் என அச்சம் உருவாகியுள்ளது. இதேவேளையில் கச்சா எண்ணெய் விலை பெரிய மாற்றம் இல்லாமல் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 95.30 டாலராக உள்ளது.
இதேபோல் அமெரிக்க ராணுவத்தின் இன்றைய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்க மத்திய கிழக்கில் தனது பலத்தை அதிகரிக்கத் திட்டமிட்டு ஏற்கனவே 2 விமானம் தாங்கும் இரண்டு கப்பல்களை வைத்திருக்கும் நிலையில், தற்போது 3வது கப்பலைக் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்கக் கடற்படையும், விமானப் படையும் இணைந்து பயன்படுத்தும் Theodore Roosevelt என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்கு வந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஆக்சியோஸ் தளத்திற்குத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் மிட்டேர்ம் தேர்தலுக்கு பின்பும் ஈரான் மீதான போரில் நிலையான முடிவை எடுக்காமல் தொடர்ந்து மிரட்டலும், எச்சரிக்கையும் நிறைந்த கருத்துக்களாகவே இருந்து வருகிறது.
மேலும் டிரம்ப் ஈரான் மீது பெரிய அளவிலான போரை நடத்தவும், இதை நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தும் திட்டத்தில் அமெரிக்கா உள்ளது. இதன் வாயிலாகவே தற்போது 3 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது என கணிக்கப்பட்டு உள்ளது.
இல்லையெனில் ஈரானை மிரட்டவும், பேச்சுவார்த்தையில் தனது கை ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கப்பலைக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் கருத்து நிலவுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் ஈரான் போர் மீண்டும் துவங்கினால், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி உருவாகும், அமெரிக்கா, இந்தியா என உலகளவில் பொருளாதாரத்தில் பெரும் பங்கீட்டைக் கொண்ட நாடுகளில் பணவீக்கம் மத்திய வங்கிகளின் இலக்கில் இருந்து தாண்டியுள்ளது. இதனால் வட்டி விகிதங்கள் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
