இன்றைய காலத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், அமெரிக்காவில் பணியாற்றும் பல இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் எதிர்காலம் பற்றிய சந்தேகத்தில் உள்ளனர். செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி, நிறுவனங்களின் செலவு குறைப்பு மற்றும் பெரிய அளவிலான பணிநீக்கங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப வேலைகள் குறைந்துவிட்டன.
இதனால் H-1B விசா வைத்தவர்களுக்கு தங்கள் வேலை மற்றும் வாழ்க்கை திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. AI அதிக வேகத்தில், குறைந்த செலவில் பல வேலைகளை செய்து முடிக்கிறது. அதனால், நிறுவனங்களுக்கு அதிக ஊழியர்கள் தேவையில்லை. இதுதான் பணிநீக்கங்களுக்கு முக்கியக் காரணமாகும்.

H-1B என்பது அமெரிக்கா வெளிநாட்டு நிபுணர்களுக்கு வழங்கும் வேலைவாய்ப்பு விசா. இந்தியர்கள் இதில் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் இப்போது வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியுள்ளதால், அமெரிக்காவில் இந்திய H-1B விசா வைத்திருப்பவர்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், பலர் வேலை இழந்ததால், வீடு திரும்ப வேண்டுமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் உள்ளனர். புதிய வேலை தேடுவதற்கும் விசா நிலையை புதுப்பிப்பதற்கும் கஷ்டங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, மைக்ரோசாப்ட், மெட்டா, க்ரௌட்ஸ்ட்ரைக் மற்றும் பிளாக் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏராளமான பணி நீக்கங்களை அறிவித்துள்ளன. இந்த பணிநீக்கம் தொழில்நுட்பத் துறையின் நிலைமையை மிகவும் சிக்கலானதாக மாற்றிவிட்டது.
இந்த நிலையில், ஒரு பயனர் Reddit பதிவில் விரிவாக இந்த நிலையை பற்றி விவரித்துள்ளார். அவர் கூறுகையில், AI இப்போது ஆலோசனை, புரோகிராமிங் போன்ற வேலைகளை எளிதாக்கி வருகிறது. இதனால் குறைவான ஊழியர்களே போதுமானதாக இருக்கிறது. அதனால், அமெரிக்கா குடிவரவு குறைக்கும் நோக்கத்தில் இருக்கிறது. ஆகையால், 2-3 ஆண்டுகளில் இந்தியர்கள், சீனர்கள் பெருமளவில் தங்கள் நாடுகளுக்கு திரும்புவார்கள் என நான் நம்புகிறேன் என்றார். அவர் வெளியிட்ட இந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது.
மேலும், இந்த பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்தனர். அதில், ஒருவரின் கருத்து H-1B விசா என்பது உள்ளூர் சந்தையில் கிடைக்காத திறமைக்காகவே ஆனால் பலர் இப்போது இந்த விசாவை சாதாரண வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார். மற்றொருவர், AI சிக்கலான வேலைகளையும் ஆட்டோமேஷன் செய்யக்கூடியதாக வளர்ந்து வருகிறது. இந்த யுகத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால், நிச்சயம் ஆபத்தே என்றார்.
இந்நிலையில், சிலரது கணிப்புப்படி, AI வேலைவாய்ப்பை மிகப் பெரிய அளவில் மாற்றிவிடும். ஆனால் ஒரே நேரத்தில், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க, சிக்கலான விஷயங்களை தீர்க்க திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். அதனால், H-1B விசா முறையே மறைந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என்பது நிச்சயம் என்கிறார்கள்.
இது குறித்து, மற்றொரு நபர் கூறுகையில், உங்கள் வருமானத்திற்குள் வாழுங்கள். உங்கள் நிறுவனம் இந்தியாவில் உங்களுக்கு முழுநேர வேலை தரும் வகையில் இருந்தால், அங்கே சென்றுவிடுவது ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம். கிரீன் கார்டு இருந்தாலும் கூட, அடிப்படை IT திறன்களை மட்டும் வைத்திருக்கும் போது நம்மை பாதுகாப்பதில்லை என்று கூறினார். எனவே, இந்த சூழலில், உங்களுடைய திறமைகளை மேம்படுத்திக் கொண்டு, பல துறைகளில் பயிற்சி பெற்றவராக மாற வேண்டியது மிகவும் அவசியம். வேலை நிச்சயமற்ற காலத்தில், உங்கள் சொந்த திறமைகளே உங்களை பாதுகாக்கும் கவசமாக இருக்கும்.
More From GoodReturns

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications