ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் AI ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் சில நிறுவனங்களில் AI ஏஜெண்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏஜெண்டுகள் பாதி வேலையை தாமாகவே முடித்து விடுகின்றன. இதனால் மனித தேவை குறைந்து வருகிறது.
அப்படி இருக்கையில் அடோப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சாந்தனு நாராயணன் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார். சாந்தனு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதவர்களை விட அதிக வாய்ப்புகளை பெறுவார்கள் என்றும், அவற்றை பயன்படுத்தத் தெரியாதவர்களை விட வேலைகளிலும் மற்ற விஷயங்களிலும் முன்னணியில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 21.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வரும் 62 வயதான சாந்தனு, இந்தியா வந்த போது எக்கனாமிக் டைம்ஸுடன் பேசியுள்ளார்.

சாந்தனுவிடம் உலகில் நிறைய நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.. அடோபின் பார்வையில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாந்தனு அடோப் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது. தற்போது இந்நிறுவனத்திற்கு தேவையான நிதி, தொழில்நுட்பம், மனித வளம் என அனைத்தும் போதுமானதாக உள்ளது.
என்னதான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் பலவீனமான நிறுவனங்கள் சிரமப்படும். ஆனால் அடோப் போன்ற வலுவான நிறுவனங்கள் தங்கள் இருப்பை கண்டிப்பாக நிலை நிறுத்திக் கொள்ளும். அடோப் உலகளவில் புகழ்பெற்ற நம்பகமான பிராண்ட். எனவே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நம்பகமான பிராண்டை நோக்கி நகர்வார்கள். ஆக பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது அடோப் போன்ற நிறுவனங்கள் சிறப்பாகவே செயல்பட முடியும் என்று கூறினார்.
சாந்தனுவிடம், தற்போது ஒரு அச்சம் நிலவுகிறது.. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் படைப்பாற்றல் துறையை தாக்குமா? இது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சாந்தனு ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் வரவிருக்கும் காலத்தில் எந்தெந்த தொழில்களில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பதில் அளித்திருந்தார்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தாதவர்களை மாற்றி அமைப்பார்கள் என்று கூறினார். அதாவது தொழிற்சாலைகளில் ஆட்டோமேஷன் வந்தபோது அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த தொழிலாளர்கள் அதை பயன்படுத்தத் தெரியாதவர்களை விட உற்பத்தி திறன் அதிகம் உள்ளவர்களாக கருதப்பட்டனர். அதேபோல கணினி பயன்பாடு பரவலாக இருக்கும்போது கணினி அறிவு பெற்றவர்கள், கணினியை சிறப்பாக பயன்படுத்த தெரிந்தவர்கள் பயன்படுத்தத் தெரியாதவர்களை விட பல துறைகளிலும் முன்னணி வகிப்பார்கள்.
அதேபோல ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் கிரியேட்டிவிட்டி துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சாந்தனு நம்புகிறார். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தெரிந்த ஊழியர்கள் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தெரியாதவர்களை விட அதிக திறனுடனும், வேகத்துடனும் பணியாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார்.
ஒருபுறம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையுமா? என்ற நிலை இருந்தாலும் மறுபுறம் அதைத் திறமையாக பயன்படுத்த தெரிந்தாலும் வேலை சந்தையில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை இவருடைய கருத்து பிரதிபலிக்கிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications