பியூச்சர் ரீடைல் பங்குகள் 5% உயர்வு.. எல்லாப் புகழும் முகேஷ் அம்பானிக்கே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக் பஜார், நீல்கிரீஸ், Fbb, சென்டரல், பிராண்ட் பேக்டரி, ஹெரிடேஜ் பிரெஷ், 7Eleven எனப் பல முக்கிய ரீடைல் வர்த்தகங்களை வைத்திருக்கும் பியூச்சர் குரூப் நிறுவனத்தை, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் வாங்க முடிவு செய்து இதற்கான பேச்சுவார்த்தை இரு தரப்பு மத்தியிலும் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்த நிலையில் தற்போது ஒப்பந்தம் செய்யும் அளவிற்குப் பேச்சுவார்த்தை நெருங்கிவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் எதிரொலியாக வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்திலேயே கிஷோர் பியானி தலைமை வகிக்கும் பியூச்சர் குரூப் நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவான பியூச்சர் ரீடைல் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

2020ஆம் ஆண்டில் பியூச்சர் ரீடைல் பங்குகளின் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் பாருங்கள்.

 மீண்டும் வட்டி குறைப்பு இருக்கலாம்.. பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கலாம்..! மீண்டும் வட்டி குறைப்பு இருக்கலாம்.. பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுக்கலாம்..!

வர்த்தக இணைப்பு

வர்த்தக இணைப்பு

சில வாரங்களுக்கு முன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சுர் குரூப் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாகச் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

முதலில் பியூச்சர் குரூப்-ன் பியூச்சர் ரீடைல், பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ் மற்றும் பியூச்சர் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் ஆகிய 3 பெரிய நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும், இணைத்த பின்பு இந்தக் கூட்டணி நிறுவனத்தை மொத்தமாக முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்குவதாகத் தகவல் கிடைத்தது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சுர் குரூப்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சுர் குரூப்

தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சுர் குரூப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் எவ்விதமான தகவலையும் தெரிவிக்காத நிலையில் ரிலையன்ஸ் ரீடைல், பியூச்சுர் குரூபின் ரீடைல் வர்த்தகப் பிரிவை எப்படி வாங்குகிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை.

பங்கு மதிப்பு

பங்கு மதிப்பு

இரு நிறுவனங்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது என்ற செய்தி முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீட்டுக்காகப் புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாகத் தொடர்ந்து சரிந்து வந்த பியூச்சர் ரீடைல் பங்குகள் இன்று ஒரே நாளில் அதிகப்படியாக 5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை 95.45 ரூபாய்க்கு வர்த்தக முடிந்த நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் 4.98% சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 100.20 ரூபாய்க்கு வர்த்தகமானது.

 

மோசமான 2020

மோசமான 2020

பியூச்சுர் குரூப் நிறுவனத்திற்கு இந்த 2020ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாகவே விளங்குகிறது. அதிகளவிலான கடன், மந்தமான வர்த்தகம், இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கடுமையான வர்த்தகச் சந்தை மதிப்பு எனப் புரட்டி எடுத்துள்ளது.

இந்த வருடம் பிப்ரவரி 17ஆம் தேதி 376.15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இக்காலகட்டத்தில் மிகவும் குறைவாக ஏப்ரல் 16ஆம் தேதி வெறும் 60.70 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

 

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

பியூச்சர் குரூப் கீழ் இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியிலிட்டப்பட்டுள்ளது. பியூச்சர் ரீடைல் லிமிடெட், பியூச்சர் கன்ஸ்யூமர் லிமிடெட், பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன் லிமிடெட், பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட், பியூச்சர் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் லிமிடெட் ஆகியவை ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: future group
English summary

Future Retail shares up 5%: Amid talks with Reliance Retail acquisition at the final stage

Future Retail shares up 5%: Amid talks with Reliance Retail acquisition at the final stage
Story first published: Monday, July 27, 2020, 16:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X