ஒரு வீட்டில் ஒரு விசேஷம் இருந்தால் அங்கு மகிழ்ச்சியும் பண வரவும் இருக்கும். அதேபோல் ஒரு நாட்டில் மிகப் பெரிய சர்வதேச நிகழ்வு நடைபெற்றால் அதனால் பொருளாதார வளர்ச்சியும், வியாபாரம் அதிகரித்தலும் ஏற்பட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள்தான். இதுதான் உலக இயல்பு.
ஆனால் புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்காக அங்குள்ள பிரபலமான முக்கியமான கன்னாட் பிளேஸ் கான் மார்க்கெட்டை 3 நாட்கள் மூடுவதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மொத்தம் ரூ.450 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அந்த மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரிகள் சோகத்துடன் புலம்புகின்றனர்.

அண்மையில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட்டை ரூ.3 கோடி செலவில் புதுப்பித்த மத்திய அரசு இப்போது அந்த மார்க்கெட்டில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் கடைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது வியாபாரிகள் இடையே கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.
செப்டம்பர் 8(நாளை) முதல் 10 ஆம் தேதி வரை ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மூன்று நாட்களில் கான் மார்க்கெட்டில் எந்த வியாபாரமும் நடைபெறாது என்பதால் தங்களுக்கு ரூ.350 முதல் ரூ.450 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
உச்சி மாநாட்டையொட்டி கன்னாட் பிளேஸ் மார்க்கெட் மட்டுமல்லாமல் புது டெல்லி மாவட்டத்தில் உள்ள பிரபல மார்க்கெட்களான பெங்காலி மார்க்கெட், கான் மார்க்கெட் ஆகியவையும் மூடப்படும்.
இந்த நடவடிக்கையால் தங்களது வயிற்றுப்பிழைப்பில் மண் விழுந்து விடும் என்று வியாபாரிகள் புலம்புகின்றனர். இதில் சிறு வியாபாரிகள், பிளாட்பார வியாபாரிகள்தான் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தொழிலுக்கு வாங்கிய கடனுக்காக அன்றாடத் தவணையைக் கட்டமுடியாமல் போகும் என்று தவிக்கின்றனர்.
இது பற்றி புதுடெல்லி வியாபாரிகள் சங்கத் தலைவர் அதுல் பார்கவா கூறுகையில், உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8 முதல் 10 வரை கன்னாட் பிளேஸ் மார்க்கெட் இயங்காது. இந்த மூன்று நாட்களும் வார இறுதியை ஒட்டி வருவதால் வியாபாரிகளுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
கன்னாட் பிளேஸ் மார்க்கெட்டில் தினசரி ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் அடுத்த
மூன்று நாட்களுக்கு மொத்தம் ரூ.450 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அரசின் இந்த முடிவு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது நல்லதல்ல. ஆனால் பாதுகாப்பு காரணங்களை காட்டி மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறுவது சரியல்ல என்றார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications