டெல்லியில் நடந்த முதல் நாள் ஜி20 கூட்டத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா மெகா பொருளாதார வழித்தடத்தை தொடங்கும் திட்டம் தான். இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக துவங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார்.
இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இந்த திட்டம் மூலம் உலக நாடுகள் என்ன செய்யப்போகிறது.

இதுகுறித்து மோடி பேசுகையில் இன்று நாம் அனைவரும் ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கூட்டணியில் இணைந்துள்ளோம். இனி வரும் காலங்களில், இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கிய வழித்தடமாக இத்திட்டம் இருக்கும் என்றார் மோடி.
இந்த புதிய வர்த்தக பாதை சர்வதேச இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு புதிய வேகத்தை வழங்கும் என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் இத்திட்டம் மூலம் இந்தியாவை மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா உடன் நெருங்கி இணைத்துள்ளது.
இந்த இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா மெகா பொருளாதார வழித்தட திட்டத்தில் என்ன இருக்கு..?
இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகள் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தின் மூலம் இணைக்கப்பட உள்ளது, இது உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான கூட்டாண்மையின் (PGII) ஒரு பகுதியாகும். இந்த திட்டத்திற்கு வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்கும் G7 நாடுகளின் கூட்டணி உதவுகிறது.
அனைத்திற்கும் மேலாக இந்த திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான கூட்டாண்மை (PGII) குழுவின் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தயாரித்த ஆவணத்தின்படி, இந்த புதிய இணைப்பில் ரயில் இணைப்பு மற்றும் மின்சார கேபிள், ஹைட்ரஜன் குழாய் மற்றும் அதிவேக டேட்டா கேபிள் ஆகியவை அடங்கும். மேலும் இந்த திட்டத்தை கண்டங்கள் மற்றும் நாகரிகங்கள் மத்தியிலான ஒரு கிரீன் மற்றும் டிஜிட்டல் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications