G20: உலக கோப்பை தயாரித்த அதே அருண் இண்டஸ்ட்ரீஸ் ஜி20-க்கு 15000 கட்லரிகளை தயாரித்துள்ளது..!

ஜி20 மாநாட்டில் தலைவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு ராஜஸ்தானி பாணி ஜெய்ப்பூர் ஸ்பெஷல் உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.

20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் G20 உச்சிமாநாட்டுக்கு வருகை தரும் உயரதிகாரிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறப்பு மதிய உணவு, இரவு உணவு மற்றும் பிற உணவுகளை பரிமாற ஜெய்ப்பூரில் ஸ்பெஷலாக ஆர்டர் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 15,000 ஸ்பூன், ஃபோர்க், கத்தி மற்றும் பிற பாத்திரங்கள் பெற்றப்பட்டு உள்ளது.

G20: உலக கோப்பை தயாரித்த அதே அருண் இண்டஸ்ட்ரீஸ் ஜி20-க்கு 15000 கட்லரிகளை தயாரித்துள்ளது..!

இந்த 15,000 கட்லரிகளை தயாரிக்க ஏறக்குறைய 300 கலைஞர்கள் கொண்ட குழு 24 மணி நேரமும் உழைக்கிறது. பாரம்பரிய இந்திய சமையல் உற்பத்தி நுட்பங்கள் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட (CNC) நுட்பங்களைப் பயன்படுத்தி, கடினமான பணியை நிறைவேற்றுகிறது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த அருணின் குரூப் ஆஃப் கம்பெனிகளில் முக்கியமான நிறுவனமாக இருக்கும் அருண் இண்டஸ்ட்ரீஸ் தான் இந்த 15000 கட்லரிகளை தயாரித்துள்ளது. இது சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் உபகரணங்கள் மற்றும் உலோகப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.

இந்நிறுவனத்தின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள், தரம் மற்றும் வடிவமைப்புக்காக உலகின் தரவரிசையில் முன்னிலையில் உள்ளது.
இதற்கு முன்பு கூட, அருண் பபுவால் 2020 இல் ட்ரம்ப் வருகை மற்றும் 2010 & 2015 இல் ஒபாமாவின் வருகைகள் உட்பட, வருகை தரும் அமெரிக்க உலகத் தலைவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான பிரத்யேக சர்வ் வேர்கள் மற்றும் துணைப் பொருட்களை வடிவமைத்து உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜி20 கூட்டத்திற்கான 15000 கட்லரிகளை தயாரிக்கும் ஒப்பந்தம் இதே அருண் இண்டஸ்ட்ரீஸ்-க்கு வழங்கப்பட்டு இதன் தலைமை நிர்வாக அதிகாரி அருண் பபுவாலின் வழிகாட்டுதலின் கீழ், அவரது மகள் அன்டரா பபுவாலின் உதவியுடன் அனைத்து கட்லரிகளையும் தூய வெள்ளி பூசப்பட்ட பல்வேறு உலோகக் கலவைகளைப் பயன்படுத்தி இந்த கட்லரிகள் தயாரிக்கப்படுகிறது என்று நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்த முக்கியமான பணிகாக கடினமான வடிவமைப்பு செயல்முறை மற்றும் ஆலோசனைகள் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் ITC ஹோட்டல் மௌரியாவில் தொடங்கியது. பிரதமர் அலுவலகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுரைப்படி இந்த கட்லரிகள் தயாரிக்கப்படுகின்றன.

நூற்றுக்கணக்கான மாதிரிகள் தயாரிக்கப்பட்டு, இறுதியாக தற்போதைய G20 வெள்ளிப் பாத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

G20: உலக கோப்பை தயாரித்த அதே அருண் இண்டஸ்ட்ரீஸ் ஜி20-க்கு 15000 கட்லரிகளை தயாரித்துள்ளது..!

சம்பந்தப்பட்ட அனைவரின் பரிபூரண திருப்திக்கேற்ப பல்வேறு ஆலோசனைகளின் அடிப்படையில், எங்கள் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 15,000 கட்லரி மற்றும் பிற Serveware வழங்குவதற்கு மூன்று வாரங்கள் அவகாசம் தரப்பட்டது.

குழு நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளில் உலகின் சிறந்த பெயரை பெற்றுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி ஹோட்டல்கள், ஆடம்பர ரயில்கள் 'பேலஸ் ஆன் வீல்ஸ்', புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகை, சொகுசு கப்பல் அல்லது ஒரு விமானத்தின் கேட்டரிங் சேவை அல்லது வெளிநாட்டில் உள்ள ஒரு முன்னணி பல்பொருள் அங்காடி என பல இடத்தில் அருண் இண்டஸ்ட்ரீஸ் தயாரிப்புகள் உள்ளது.

ஜார்ஜியோ அர்மானி போன்றவர்கள் உட்பட உலகளவிலான புகழ்பெற்ற வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள், உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற அரச குடும்பங்களுக்கான பிரத்யேக சேகரிப்புகளையும் அருண் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

1960 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அருண் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரிலையன்ஸ் உலகக் கோப்பை 1987, எம்ஆர்எஃப் உலகத் தொடர் கோப்பை 1989, தி ஹீரோ கோப்பை 1993, வில்ஸ் உலகக் கோப்பை 1996 மற்றும் 1996 ஆம் ஆண்டுக்கான கோப்பைகள் உட்பட உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளுக்காக ஏராளமான கோப்பைகளை வடிவமைத்து தயாரித்ததற்காக மிகவும் பாராட்டப்பட்டதாகும்.

ஐசிசி உலகக் கோப்பை, Independence Cup 1997, வில்ஸ் இன்டர்நேஷனல் கோப்பைக்கான அனைத்து கோப்பைகளும், உலக அழகி மற்றும் கோல்ட் ஃப்ளேக் ஓபன் போட்டிகள் (டென்னிஸ்) உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான பல கோப்பைகளும் அருண் இண்டஸ்ட்ரீஸால் உருவாக்கப்பட்டவையாகும்.

இந்த சாதனை ஜெய்ப்பூர் மற்றும் இந்திய மக்களுக்கும், பல்வேறு திறன்களில் குழு நிறுவனங்களுடன் தொடர்புடைய மற்றும் அதன் பொறாமைமிக்க வெற்றிக் கதைக்கு பங்களித்த ஏராளமான கைவினைஞர்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+