அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைநகர் டெல்லிக்கு இருநாடுகள் மத்தியிலான இருதரப்பு சந்திப்பு மற்றும் ஜி-20 உச்சி மாநாட்டிற்காக வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, இரு நாடுகள் மத்தியிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் பாதாம் மற்றும் மசூர் பருப்பு போன்ற சில அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதிக்கு பதிலடி கொடுக்கப்பதற்காக விதிக்கப்பட்ட சுங்க வரிகளை செப்டம்பர் 6, 2023 முதல் ரத்து செய்தது மத்திய அரசு.
இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் சில ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான சுங்க வரியை அமெரிக்கா உயர்த்தியதை அடுத்து, ஜூன் 2019 இல், 28 அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தியது.

செப்டம்பர் 5 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், மத்திய நிதி அமைச்சகம் இந்த வரி உயர்வுகளில் சிலவற்றை பொது நலன் கருதி கைவிடுவது அவசியம் என்று கணக்கிட்டு குறைத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
ஜூன் 2023 இல் அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி அரசு பயணம் மேற்கொண்ட போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பைடன் நிர்வாகம் உலக வர்த்தக அமைப்பில் (WTO) நிலுவையில் உள்ள ஆறு இருதரப்பு வர்த்தக பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், விதிக்கப்பட்ட வரி உயர்வைத் திரும்பப் பெறுவதற்கும் ஒப்புக்கொண்டனர்.
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா விதித்த வரி விதிப்பில் அக்ரூட் பருப்புகள், பாதாம் மற்றும் ஆப்பிள்கள் உட்பட சில அமெரிக்க தயாரிப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு ஜோ பைடன் வருகையையொட்டி தற்போது வரி விதிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கலிபோர்னியாவின் பாதாம் போர்டு (ABC) வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் வரி குறைப்பு நடவடிக்கையை வரவேற்றுள்ளது, இந்தியாவிற்கு அவர்கள் அனுப்பும் பாதாம் ஏற்றுமதி மீதான இறக்குமதி வரிகள் இப்போது சிப்பியுடன் இருக்கும் பாதாம் பருப்பு ஒரு கிலோவுக்கு ₹35 ஆகவும், வெறும் பாதாம் பருப்பு கிலோவுக்கு ₹100 ஆகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்திய அரசு விதித்த வரி காரணமாக சிப்பியுடன் இருக்கும் பாதாம் பருப்பு ஒரு கிலோவுக்கு ₹41 ஆகவும், வெறும் பாதாம் பருப்பு கிலோவுக்கு ₹120 ஆகவும் இந்தியா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications