ஜி 20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாபெரும் சிறப்பு கூட்டத்தில் நேரில் வந்து கலந்துக்கொண்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த உச்சி மாநாட்டில் 15க்கும் மேற்பட்ட இருதரப்பு சந்திப்புகளை மாநாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்துவார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிஜிட்டல் பணவர்த்தக முறைகளில் கூட்டாகச் செயல்படுவது உள்பட இரு நாடுகளுக்கும் இடையே 3 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், டிஜிட்டல் பேமென்ட் முறைகள் தொடர்பான ஒப்பந்தம் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI)வுக்கும் பங்களாதேஷ் வங்கிக்கும் இடையே செய்யப்பட்டு உள்ளன.
இரண்டாவது ஒப்பந்தம், 2023-2025 ஆம் ஆண்டுக்கான இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே கலாசார பரிமாற்றத் திட்டத்தை (CEP) புதுப்பித்தல் குறித்ததாகும்.
மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் பங்களாதேஷ் விவசாய ஆராய்ச்சி கவுன்சில் (BARC) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.
வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனாவும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA), பொருட்கள் மற்றும் சேவைகளில் வர்த்தகம், முதலீட்டைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல், அரசியல் உட்பட முழு அளவிலான இருதரப்பு ஒத்துழைப்பைப் பற்றிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு விரும்புகின்றனர்.
அத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு, எல்லை மேலாண்மை, வர்த்தகம் மற்றும் இணைப்பு, நீர் வளங்கள், மின்சாரம் மற்றும் எரிசக்தி, வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான கலாசார தொடர்புகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியும், பிரதமர் ஷேக் ஹசீனாவும், அகர்தலா-அகவுரா ரயில் இணைப்பு, மைத்ரி மின் உற்பத்தி நிலையத்தின் யூனிட்-II மற்றும் குல்னா-மொங்லா ரயில் இணைப்பு ஆகிய திட்டங்களின் கூட்டுத் திறப்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications