ஜி 20 ஸ்பெஷல்: UPI One World என்றால் என்ன? இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் வீசப்போகிறது..!!

ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாகத் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தலைநகர் புதுடெல்லியில் முடிந்துவிட்டது. இதை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளும் என்ஆர்ஐகளும் இந்தியாவுக்கு அதிக அளவில் வர இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் அவர்களது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை சுமுகமாகவும், தங்கும் வசதிகளை எளிதாகப் பெறவும் அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. இதை தொடர்ந்து அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கு எளிதாக டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்ய யூபிஐ ஒன் வேர்ல்டு நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஜி 20 ஸ்பெஷல்: UPI One World என்றால் என்ன? இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் வீசப்போகிறது..!!

இந்த யூபிஐ ஒன் வேர்ல்டு நெட்வொர்க் மூலம் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நாட்டில் விரிவாக செயல்படும் யூபிஐ பேமென்ட் முறையை எளிமையாக பயன்படுத்தும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

UPI One World" என்பது UPI கட்டமைப்புக்குள் இருக்கும் ஒரு சலுகையாகும். இது இந்தியா வரும் பயணிகளுக்கு பிரத்தியேகமாக வழங்குகிறது. இது UPI சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு ப்ரீபெய்ட் கட்டண கருவியாக (PPI) செயல்படுகிறது.

இந்த டிஜிட்டல் வாலட் பயணிகளை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வணிகர்களிடம் எளிதாக பரிவர்த்தனை செய்ய உதவுகிறது.
பின்வரும் படிகளைப் பயன்படுத்தி UPI One World ஐ அணுகலாம்:

லொகேஷன்: RBI/FEMA வழிகாட்டுதல்களுக்கு இணங்க, நாணய பரிமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட இடங்களில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட PPI வழங்குநர்களிடமிருந்து UPI One World (UPI இல் PPI) சேவையை பயணிகள் பெறலாம்.

KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்): G20 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரஜைகள்/என்ஆர்ஐகளுக்கு அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் செல்லுபடியாகும் விசாவை சமர்ப்பித்தால் "UPI One World" வழங்கப்படும்.

பயனர்களுக்கான விரிவான KYC செயல்முறையை நடத்துவதற்கு PPI வழங்குபவர் முழு அளவிலான பணத்தை மாற்றுபவர்களுடன் (FFMCs) ஒத்துழைக்கிறார். இந்த செயல்முறையை வெற்றிகரமாக முடிப்பது PPI வாலட்டை செயல்படுத்துகிறது.

யூபிஐ ஒன் வேர்ல்டு நெட்வொர்க் இந்திய ரூபாய் பேலென்ஸ் உடன் செயல்படுகிறது. வழங்குபவரின் நியமிக்கப்பட்ட பிபிஐ பயன்பாட்டின் மூலம் அணுகலாம். பயனர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட PPI-UPI வாலட்டை அணுக, ஆப்-ஐ பதிவிறக்கி பதிவு செய்ய வேண்டும்.

பணத்தை லோடு செய்வது: KYC சரிபார்ப்பைப் பின்பற்றி, வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் என்ஆர்ஐகள் தங்கள் UPI One World வாலட்டில், வெளிநாட்டு நாணயத்தை பணமாகவோ அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட கட்டணக் கருவிகள் மூலமாகவோ மாற்றலாம்.

பயணிகள் தங்கள் UPI One World வாலட்டைப் பெற்றவுடன், UPI ஆதரவுடன் இந்தியாவில் உள்ள எந்த வணிக இடத்திலும் அவர்கள் பணம் செலுத்தி சேவைகளைப் பெறலாம்.

வாலட்டை அணுகுதல்: பயணிகள் PPI-UPI பயன்பாட்டில் உள்நுழைந்து "ஸ்கேன் செய்து பணம் செலுத்து" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். வணிகர் வழங்கிய QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் உடனடியாக PPI-UPI ஆப்ஸிலிருந்து பணத்தைப் பரிமாற்றலாம்.

ரியல்டைம் பேலன்ஸ்: PPI-UPI பயன்பாட்டின் மூலம் பயனர்கள் ரியல்டைம் வாலட் பேலன்ஸ் புதுப்பிப்புகளை அணுகலாம். UPI One World இல் பயன்படுத்தப்படாத நிலுவைகளை வெளிநாட்டு நாணயத்தில் பணமாக்கலாம் அல்லது நிறுவப்பட்ட அந்நியச் செலாவணி விதிமுறைகளின்படி அசல் மூலத்துக்கு மாற்றலாம்.

UPI ONE WORLD Wallet இன் நன்மைகள்: பணத்தை எடுத்துச் செல்வது, பல அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது ஆகியவற்றின் தேவையை நீக்குகிறது.
நேரடியான, பாதுகாப்பான மற்றும் உடனடி டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்குகிறது.
செலவுகளைக் கண்காணிப்பதற்காக PPI-UPI பயன்பாட்டில் டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரியை வழங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+