ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பலர் டெல்லி வருகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பின் உச்சத்தை தொட்டு உள்ளது. அப்படி இந்த கூட்டத்திற்கு யாரெல்லாம் வருகிறார்கள், வருவார்கள் என சொன்ன பலர் வர முடியாது என கூறியவர்கள் யார்..?
உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் கூடுவதால் அனைத்து தரப்பினரும், இக்கூட்டத்தை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். தற்போது உலக நாடுகளை பொருளாதார மந்தநிலைகள் மற்றும் உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த முக்கியமான தருணத்தில் இந்தியாவின் தலைமையில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடக்க இருக்கும் காரணத்தால் இதுக்குறித்து விவாதங்கள் கட்டாயம் இருக்கும். சரி இக்கூட்டத்தில்
யார் கலந்து கொள்கிறார்கள், யார் கலந்து கொள்ளவில்லை என்பதன் முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.
உறுதிப்படுத்தப்பட்ட G20 பங்கேற்பாளர்கள் பட்டியலில் முதலில் இருப்பவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று புதுடெல்லிக்கு செல்வதாகவும், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதாகவும் உறுதிப்படுத்தினார்.
இவரை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக், இந்தியாவுக்கான தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக டெல்லி வருகிறது. இவர்களோடு ஜப்பான் பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா தனது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தற்போது இந்தோனேசியாவில் உள்ளார். ஆனால் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் இந்தியாவில் இருப்பார் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்வதுடன், பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார்.
ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஆகியோரும் இந்த உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர்.
இந்தியா தலைமையில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருப்பார். ஆனால் சீன அரசு கவுன்சிலின் சார்பார சீனப் ப்ரிமியர் லீ கியாங், நாட்டின் தூதுக்குழு உடன் வருகிறார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் இருந்து சீன அதிபர் வராதது இதுவே முதல் முறை.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லியில் நடக்கும் G20 உச்சி மாநாட்டிற்கு வரவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) உக்ரைனில் போர்க்குற்றம் செய்ததாக ரஷ்ய ஜனாதிபதி மீது குற்றம் சாட்டி கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் ரஷ்ய அரசு விளாடிமிர் புடின் இந்திய பயணத்தை கடுமையாக மறுத்துள்ளது. ஆனால் ரஷ்யாவின் சார்பாகா அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான குழு வருகிறது.
இவர்களோடு ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி ஜி20 கூட்டத்திற்கு வரவில்லை. மேலும் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் கலந்து கொள்ளவில்லை.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications