G20 Summit: ஜி 20 உச்சி மாநாட்டினால் இந்தியா அடைந்த பலன்கள் என்னென்ன?

டெல்லியில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்கியது. இந்த மாநாட்டின் மூலம் இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் வெளியுறவுகள், இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகளால் இந்தியாவுக்கு ஏகப்பட்ட நன்மைகள் விளைந்துள்ளன.

குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுடனான உறவில் நல்ல ஏற்றம் காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு வெகுவாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும் அதிக மதிப்பு கிடைத்துள்ளது.

G20 Summit: ஜி 20 உச்சி மாநாட்டினால் இந்தியா அடைந்த  பலன்கள் என்னென்ன?

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் எழுதியுள்ள புத்தகத்தில், அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தவும், சீனாவை சமாளிப்பதற்கும், ஐரோப்பாவை நெருங்குவதற்கும், ரஷியாவுடனான உறவை நன்கு உறுதிப்படுத்தவும், ஜப்பானுடன் சேர்ந்திணைந்து செயல்படவும், அண்டைநாடுகளுடன் நட்பை அதிகரிக்கவும் இதுதான் சரியான தருணமாகும். இந்த விஷயங்களில் ஜி20 உச்சிமாநாட்டின் மூலம் வெற்றியைக் காண முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்ல இந்த உச்சி மாநாட்டினால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியாவுக்கு வந்ததன் மூலம் அந்நாட்டுடனான உறவு பலப்பட்டதோடு, இருநாட்டுக்குமிடையேயான நம்பிக்கை மேலும் ஆழமானது.
அத்துடன் உலகளவில், பிராந்திய அளவில், இருதரப்பு அளவிலும் பரஸ்பரம் கூட்டுறவை பலப்படுத்தியுள்ளது.

மல்டிலேட்டரல் டெவலப்மென்ட் பேங்க்ஸ் (MDBs), டிஜிட்டல் பப்ளிக் இன்ப்ராஸ்ட்ரக்சர் (DPI), குளோபல் பயோஃபியூல்ஸ் அலயன்ஸ் ஆகியவற்றில் அவர்களுடனான கூட்டு இந்திய-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

அடுத்ததாக வட அமெரிக்கா, ஐரோப்பா, மேற்காசியா, தெற்காசியா ஆகிய நான்கு பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகளுடன் உள்ள உறவில் இதுவரை இல்லாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை சீனாவின் இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் உதவிக்கு ஒரு மாற்றாக கூற முடியாது. இந்த புதிய வளர்ச்சியினால் இந்தியாவுக்கு சிறப்பான வர்த்தக வாய்ப்புகளையும் தந்துள்ளது.

மூன்றாவதாக இந்த மாநாடானது டெல்லிக்கும் மாஸ்கோவுக்குமான நீண்டகால நட்பு இன்னும் நீடிக்கிறது என்பதை பிரதிபலித்தது. தற்போது உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள போர் நிலைமையிலும் ரஷ்யாவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி வரும் நிலையிலும் தனது பிராந்திய ஆதிக்கத்தை இந்தியா நிலைநாட்டியுள்ளது.

விளாடிமிர் புதினின் வலியுறுத்தலுக்கு ஏற்ப ரஷ்ய போர் தொடர்பான பிரகடனத்தை கைவிட்டதையும் உறுதி செய்தது. அத்துடன் குளோபல் சௌத் என்ற நிர்மாணத்துக்கு ஆதரவாக ரஷ்யாவை சரிகட்டியுள்ளது. இதை இந்தியாவின் மிகப்பெரிய சாதனை எனலாம். ஏனென்றால் இதை வைத்து சீனாவின் மிரட்டலை தூசுபடியாக்கிவிடலாம்.

நான்காவதாக, இந்த உச்சி மாநாட்டின் மூலமாக இந்தியாவின் உறவுகள் பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது. குளோபல் சௌத்தை வழிநடத்துவதில் இந்தியா தலைமை தாங்குவதற்கான முதனிலையை அடைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் வளர்ந்து வரும் நாடுகளின் நிதித் தேவை, காலநிலை மாற்றங்கள், கருங்கடல் தானிய முன்னெடுப்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் வழி ஏற்பட்டுள்ளது.
இருதரப்பு மற்றும் உலகளாவிய உறவுகளைப் பொருத்தமட்டில் இந்தியா தனது நிலையை வலுப்படுத்தியுள்ளதோடு பல்வேறு நன்மைகளையும் நீண்டகால அடிப்படையில் இந்த உச்சி மாநாட்டின் மூலம் சாதித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+