இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் G20 உச்சிமாநாட்டிற்காக நாட்டின் மூலதனத்தை மேம்படுத்த மத்திய அரசால் சுமார் 4,100 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
G20 உச்சிமாநாடு சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் நடைபெற்றது. இந்த முக்கியமான நிகழ்ச்சிக்கு அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளின் அதிபர்களும், அரசு தலைவர்கள், நிதியமைச்சர்கள் வந்தனர். இந்த முக்கிய நிகழ்வு தொடர்பான செலவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உலகமே வியந்து பார்த்த இந்த ஜி20 கூட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 12 பிரிவுகள் கீழ் செலவு செய்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட 2023-24 பட்ஜெட்டில் ஜி20 தலைமை பதவிக்கு மத்திய அரசு சுமார் 990 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட தொகை பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட தொகையை விட நான்கு மடங்கு அதிகமாகியுள்ளது.
ஜி20 கூட்டத்திற்காக டெல்லி முழுக்க செய்யப்பட்ட அலங்காரம் முதல் உலக நாடுகளின் தலைவர்கள் போக்குவரத்து, தங்கும் வசதிகள் வரையில் இந்திய அரசு அதிகப்படியாக செலவு செய்துள்ளது. சுமார் 9 அரசு அமைப்புகள் NDMC, MCD துவங்கி பாதுகாப்பு துறை அமைச்சகம் வரையில் சுமார் 75 கோடி ரூபாய் முதல் 3500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியா டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் மட்டுமே இதை உறுதி செய்ய முடியும், தற்போதைய நிலவரப்படி மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது 990 கோடி ரூபாய், செலவு செய்யப்பட்டதாக கூறப்படுவது 4100 கோடி ரூபாய்.
இந்தியா தனது முதல் ஜி20 தலைமை கூட்டத்தில் 4100 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறப்படும் வேளையில் மற்ற நாடுகள் ஜி20 உச்சிமாநாட்டை நடத்த எவ்வளவு பணம் செலவழித்துள்ளது தெரியுமா..?
1. இந்தோனேசியா (2022) - 364 கோடி ரூபாய்
2. ஜப்பான் (2019) - 2660 கோடி ரூபாய்
3. அர்ஜென்டினா (2018) - 931 கோடி ரூபாய்
4. ஜெர்மனி (2017) - 642 கோடி ரூபாய்
5. சீனா (2016) - 1.9 லட்சம் கோடி ரூபாய்
6. ஆஸ்திரேலியா (2014) - 2,653 கோடி ரூபாய்
7. ரஷ்யா (2013) - 170 கோடி ரூபாய்
8. பிரான்ஸ் (2011) - 712 கோடி ரூபாய்
9. கனடா (2010) - 4351 கோடி ரூபாய்
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications