உலகத் தலைவர்களின் சக்தி வாய்ந்த ஜி20 குழுவை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறை என்பதாலும், இக்கூட்டத்தின் மூலம் இந்தியாவின் பிம்பத்தை உலக நாடுகள் முன்னிலையில் மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் அனைத்து வகையிலும் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் போக்குவரத்து ரவுண்டானா அலங்கார மலர்கள் மற்றும் நீரூற்றுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பொது கட்டடங்கள் மற்றும் நடைபாதைகளுக்கு புதிய கலர்கோட்டிங் செய்யப்பட்டு ஜொலிக்கின்றன.

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் இரண்டு நாள் G20 உச்சி மாநாட்டில் உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், குரங்குகளை விரட்ட லாங்கர்களின் கட்அவுட்டுகள் மற்றும் 130,000 போலீஸ் மற்றும் துணை ராணுவப் பணியாளர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஜி20 என்றால் என்ன..?
1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு உலகின் 20 முக்கிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த சிறப்பு பொருளாதாரக் குழுவை உருவாக்கியது. அத்தகைய நெருக்கடிகளை இனி ஒரு நாட்டின் எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு தேவை என்ற புரிதலுடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஜி20 குழுவில் இருக்கும் 20 நாடுகள் உலகின் 85 சதவீத ஜிடிபி மற்றும் 75 சதவீத சர்வதேச வர்த்தகத்தை கொண்டு உள்ளது. இக்குழுவில் உறுப்பு நாடுகளாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளன.
ஜி20 குழு துவங்கிய ஆரம்பக்கட்டத்தில் நிதித்துறை அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்றனர். பின்னர் அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவர்களும் 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு தலைவர்களின் உச்சிமாநாட்டுக்காக ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்க முடிவு செய்தனர்.
இந்தியாவில் ஜி20 கூட்டத்தில் எதைபற்றி விவாதிக்கப்படுகிறது..?
இந்தியாவின் ஓராண்டு கால தலைமையின் கீழ், பலதரப்பு நாடுதள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து வளரும் நாடுகளுக்கு அதிக கடன்கள், சர்வதேச கடன் கட்டமைப்பை சீர்திருத்துதல், கிரிப்டோகரன்சி மீதான விதிமுறைகள் மற்றும் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
இந்த ஆண்டு இதுவரை, உக்ரைனில் நடந்த போர் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்ததால் இதுவரை ஜி20 கூட்டமைப்பு எந்த கூட்டு அறிக்கையையும் வெளியிடவில்லை.
உக்ரைனில் நடந்த போருக்கு ரஷ்யா-வை குற்றம் சாட்டுவதற்கு ரஷ்யாவும் சீனாவும் எதிர்ப்பு தெரிவிக்கும் அதே வேளையில், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூட்டறிக்கைக்கு கடும் கண்டனத்தை கோரியுள்ளன.
இந்தியாவின் G20 தீம் சமஸ்கிருத சொற்றொடரான "வசுதைவ குடும்பகம்" என்பதிலிருந்து உருவாக்கப்பட்டது. இதற்கு "உலகம் ஒரு குடும்பம்" என்று அர்த்தம். டிசம்பர் 1-ம் தேதி பிரேசில் நாட்டிடம் ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஒப்படைக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications