ரஷ்யா அஸ்திவாரத்தையே ஆட்டி பார்க்கும் G7 நாடுகள்.. பிரச்சனை என்ன தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யாவின் பட்ஜெட் பற்றாக்குறையானது அடுத்த ஆண்டில் கணிசமாக உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை இடையே பற்பல அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் இருந்து வருகின்றது. குறிப்பாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்திலேயே குறி வைத்து அடுத்தடுத்த பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன.

ஜி7 நாடுகள் ரஷ்யாவின் எண்ணெய் வணிகத்தினை முடக்கும் விதமாக, எண்ணெய் விலை உச்ச வரம்பினை நிர்ணயம் செய்துள்ளன.

ரெசிஷன்-க்குள் விழுந்த ஐரோப்பா.. ரஷ்யாவின் ஆட்டம் ஆரம்பமா..?ரெசிஷன்-க்குள் விழுந்த ஐரோப்பா.. ரஷ்யாவின் ஆட்டம் ஆரம்பமா..?

விலை உச்ச வரம்பு

விலை உச்ச வரம்பு

மேற்கத்திய நாடுகள் எண்ணெய் மீது விதித்திருக்கு விலை உச்சவரம்புக்கு மத்தியில் , அதனை பின்பற்றும் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்ய போவதில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இம்மாதம் அமலுக்கு வந்த, இந்த விலை உச்ச வரம்புக்கு எதிராக ரஷ்யா எடுத்துள்ள முதல் நடவடிக்கை இதுவாகும்.

ரஷ்யாவுக்கு உதவி

ரஷ்யாவுக்கு உதவி

ரஷ்யாவிடம் இருந்து கடல் வழியாக பெறப்படும் எண்ணெய்க்கு ஒரு பேரலுக்கு 60 டாலர்களாக விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு மேல் கட்டணம் செலுத்தாமல் இருப்பதை எண்ணெய் வர்த்தகர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் காப்பீடு போன்ற முக்கிய சேவைகளையும் தொடர்ந்து பெற அனுமதிக்க வேண்டும். ரஷ்யா -உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யாவின் எண்ணெய் விற்பனை உதவிகரமாக இருந்து வருகின்றது.

 ராணுவ செலவுக்கு உதவி
 

ராணுவ செலவுக்கு உதவி

ஆனால் தற்போது இந்த எண்ணெய் விலை உச்ச வரம்பினால் அது பட்ஜெட் பற்றாக்குறைந்து ஏற்படுத்தலாம். அதுவும் பட்ஜெட்டில் திட்டமிட்டதை விட 2% அதிகமாக இருக்கலாம். ரஷ்யாவின் விலை உச்ச வரம்பானது வருவாயினை பாதிக்கலாம் என ரஷ்யாவின் மீதான விலை உச்ச வரம்பானது நிதியமைச்சர் அண்டன் சிலுவானோ தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு இது ராணுவ செலவுகளுக்கு பெரும் உதவிகரமாகவும் இருந்து வருகின்றது. ஆக ஜி7 நாடுகளின் உச்ச வரம்பு ரஷ்யாவுக்கு பெரும் தடையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

 இது முட்டாள்தனமானது?

இது முட்டாள்தனமானது?

கச்சா எண்ணெய் உச்ச வரம்பானது, அடுத்த ஆண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 5 - 7% குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் பற்றாக் குறையானது, பட்ஜெட்டில் பற்றாக்குறைய ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி விளாடிமிர் புதின் , எண்ணெய் விலை உச்ச வரம்பை முட்டதனமான ஒன்று விமர்ச்சித்தார்.

ரஷ்யாவினை பாதிக்காது?

ரஷ்யாவினை பாதிக்காது?

எனினும் ரஷ்யாவின் எண்ணெய் விலையானது உச்ச வரம்புக்கு அருகிலேயே இருந்து வருகின்றது. ஆக உச்ச வரம்பானது ரஷ்யாவினை பெரிதும் பாதிக்காது என்றும் கூறியிருந்தார். மேலும் பட்ஜெட்டை பற்றியும் கவலைப்பட தேவையில்லை என கூறியிருந்தார். பல ஆயிரம் கணக்கான ராணுவ வீரர்களை உக்ரைனுக்குள் அனுப்ப, மாஸ்கோவின் முடிவைத் தொடர்ந்து, அரசாங்கள் இந்த காலாண்டில் பெரியளவில் கடனை வாங்கியுள்ளது.

ராணுவ செலவு

ராணுவ செலவு

நடப்பு ஆண்டில் ரஷ்யாவின் ராணுவ செலவு மட்டும் 29 பில்லியன் டாலராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்டின் ஆரம்பத்தில் திட்டமிட்டதை விட அதிகமாகும். சிறப்பு இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் இருந்து மேக்ரோ பொருளாதார நிலைமைகள் அனைத்தும் மாறிவிட்டன. தற்போது பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. ஏராளமான பலவற்றின் விலை உச்சத்தில் உள்ளது.

ரஷ்யாவின் கடன்

ரஷ்யாவின் கடன்

இதனால் ரஷ்யா கடன் வாங்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் வருவாய் குறைந்தால், மேற்கோண்டு கடனுக்கு தள்ளப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலாண்டில் மட்டும் 3 ட்ரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பத்திரம் வெளியிடுபதில் அரசு சில விதிகளை தளர்வு செய்துள்ளது. தற்போது அதன் கடன் போர்ட்போலியோவில் 38% பங்கு வகிக்கிறது. மொத்ததில் ரஷ்யாவின் பொருளாதாரத்தினை திட்டமிட்டதை போல் பதம் பார்க்க ஆரம்பித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: russia ரஷ்யா
English summary

G7's oil price cap may push up russia's budget deficit

G7's oil price cap may push up russia's budget deficit
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X