இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ககன்யான் விண்வெளிப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த உள்ளார்.
விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா, குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் ஆகிய இந்த நால்வரும் சிறந்த விமானப்படை அதிகாரிகள் ககன்யான் விண்வெளிப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

ககன்யான் இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்று. சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கடந்த ஆண்டு ரோவரை தரையிறக்கி மிகப்பெரிய சாதனையை இந்தியா படைத்தது.
இதுவரை எந்த நாடுகளுமே தென் துருவத்தில் கால்பதிக்காத நிலையில் இந்தியா சந்திராயன் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அடுத்ததாக சூரியன் பற்றி ஆய்வுக்காக ஆதித்யா விண்கலத்தை ஏவி மேலும் ஒரு மைல்கல்லை எட்டியது.
இந்தியாவின் கனவு திட்டம்: விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டாலும் இதுவரை மனிதர்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது கிடையாது. அந்த சாதனையை எட்டுவதற்காக கொண்டு வரப்பட்டது தான் ககன்யான் திட்டம்.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தற்போது இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு , அங்கு அவர்கள் மூன்று நாட்கள் சோதனை நடத்தி பின்னர் பத்திரமாக பூமிக்கு திரும்பி வருவார்கள். இந்த திட்டத்திற்காக 9,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் ஆண்டு ககன்யான் ஆண்டாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பல கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளில் பயிற்சி பெற்றனர். அந்த வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா விமானப்படை மற்றும் இஸ்ரோ இணைந்து முதலில் 12 பேரை தேர்வு செய்து பல கட்ட சோதனைக்கு உட்படுத்தி அவர்களில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்தனர். 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இஸ்ரோ நான்கு பேரையும் ஆரம்பப் பயிற்சிக்காக ரஷ்யாவிற்கு அனுப்பியது.
கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக பயிற்சியில் சிறிது தாமதம் ஏற்பட்டது. 2021 இல் அந்தப் பயிற்சி முடிக்கப்பட்டது. வீரர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரசாந்த் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சுபான்ஷு சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முதலில் ரஷ்யாவில் பயிற்சி பெற்று வந்த இவர்கள் தற்போது பெங்களூரில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
விண்வெளி சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் வீரர்களின் உடல்நிலையையும், மனநிலையையும் தயார்படுத்துவதே இந்த பயிற்சிகளின் பிரதான நோக்கம் ஆகும். அடுத்த ஆண்டு ககன்யான் திட்டத்தின் மூலம் இவர்கள் விண்வெளிக்கு சென்று வரலாற்றில் இடம்பிடிக்க உள்ளனர்.
இந்த விண்வெளி வீரர்களின் தேர்வு செயல்முறை மிகவும் கவனமாக இருந்தது. இந்திய விமானப்படை (IAF) கீழ் பெங்களூருவில் உள்ள விண்வெளி மருத்துவ நிறுவனத்தில் (IAM) ஆரம்ப மதிப்பீடுகளுக்குப் பிறகு, பல வேட்பாளர்களில் இருந்து, 12 சோதனை விமான ஓட்டிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பல சுற்று மதிப்பீடுகளின் பின்னர், ஐ.ஏ.எம். மற்றும் இஸ்ரோ இந்த மதிப்புமிக்க பணிக்காக இறுதி 4 வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.
Story Written by: Devika
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications