இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகத்தின் மூலம் தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சுமார் 75000 கோடி ரூபாய் முதலீட்டில் கிரீன் எனர்ஜி வர்த்தகத்தில் 4 நிறுவனங்களை உருவாக்குவதற்கான பணிகள் செய்து வருகிறது.
இதில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுவது ஹைட்ரஜட் வாயு உற்பத்தி தொழிற்சாலை மற்றும் ஹைட்ரஜட் வாயு மூலம் இயக்கும் பியூயல் செல் தொழிற்சாலை தான். இவ்விரண்டும் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை மொத்தமாக மாற்ற முடியும்.
இந்தச் சூழ்நிலையில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்குப் போட்டியாக மத்திய அரசுக்குச் சொந்தமாக GAIL நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஹைட்ரஜட் வாயு உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானி ஆதிக்கம்
கிரீன் எனர்ஜி துறையில் அதிகளவிலான போட்டி இல்லாத காரணத்தால் முகேஷ் அம்பானி குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவார் எனக் கணிக்கப்பட்ட நிலையில் முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய திட்டத்தில் ஒன்றான ஹைட்ரஜட் வாயு உற்பத்தித் துறையில் அரசு நிறுவனமான கெயில் இறங்கியுள்ளது.
ஹைட்ரஜட் வாயு உற்பத்தி
இந்தியாவில் ஹைட்ரஜட் வாயு உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது குறித்துக் கெயில் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது, கெயில் நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரீன் ஹைட்ரஜட் வாயு உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
14 மாதம்
இந்தப் பிரம்மாண்ட தொழிற்சாலை அடுத்த 12 முதல் 14 மாதத்தில் கட்டிமுடிக்கப்பட்டு, கெயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு வர்த்தகத்திற்கு இணையான வர்த்தகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. கிரீன் ஹைட்ரஜட் வாயு என்பதால் இயற்கை எரிவாயு போல் இதில் கார்பன் இருக்காது.
4.5 டன் கிரீன் ஹைட்ரஜட் வாயு
இதுகுறித்து கெயில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான மனோஜ் ஜெயின் கூறுகையில் தினமும் 4.5 டன் கிரீன் ஹைட்ரஜட் வாயு உற்பத்தி செய்யும் அளவிற்கான 10 மெகாவாட் எலக்ரோலைசர்-ஐ அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எலக்ரோலைசர்
கிரீன் ஹைட்ரஜட் வாயுவை உற்பத்தி செய்யும் எலக்ரோலைசர்-ஐ வாங்குவதற்காகக் கெயில் ஏற்கனவே உலகளவில் டென்டர் விட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த 12 முதல் 14 மாதத்தில் எலக்ரோலைசர் வாங்கப்பட்டு உற்பத்தியை கெயில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசம்
மேலும் இந்தக் கிரீன் ஹைட்ரஜட் வாயுவை உற்பத்தி செய்யும் எலக்ரோலைசர்-ஐ அமைக்கக் கெயில் நிறுவனம் 2 முதல் 3 இடத்தைத் தேர்வு செய்துள்ளது. அதில் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் இறுக்கும் விஜைபூர்.
NTPC, இந்தியன் ஆயில்
கெயில் நிறுவனத்தைப் போலவே கிரீன் ஹைட்ரஜட் வாயுவை உற்பத்தி செய்ய NTPC, இந்தியன் ஆயில் கார்ப் ஆகிய நிறுவனங்களும் முடிவு செய்து அதற்கான பணிகளையும் செய்யத் துவங்கியுள்ளது. இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பலமுனை போட்டியை எதிர்கொள்ள உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications