ஓரே மாதத்தில் 1900% வளர்ச்சி.. நெட்டிசன்ஸ் அட்டகாசம்.. எலான் மஸ்க் சூப்பர் டிவீட்..!

அமெரிக்காவில் ஆன்லைன் வீடியோ கேம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை நிறுவனமான கேம்ஸ்டாப்-ஐ விட்டு அதன் முதலீட்டாளர்கள் வெளியேறிய நிலையில், முதலீட்டாளர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என நோக்கத்திற்காக, ரெட்டிட் தளத்தில் நெட்டிசன்ஸ் செய்த புரட்சியின் காரணமாக நஷ்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனப் பங்குகளை ஓரே மாதத்தில் சுமார் 1900 சதவீதம் வளர்ச்சி அடைய செய்து சமுக வலைத்தளத்தின் சக்தியை நெட்டிசன்ஸ் நிரூபித்துள்ளனர்.

கேம்ஸ்டாப் நிறுவனத்தின் தடாலடி வளர்ச்சி மூலம் அமெரிக்காவில் மட்டும் பிரபலமாக இருந்த இந்நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும், நெட்டிசன்ஸ் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்தும் எலான் மஸ்க் டிவீட் செய்துள்ளார்.

கேம்ஸ்டாப் பங்குகள்

கேம்ஸ்டாப் பங்குகள்

கேம்ஸ்டாப் நிறுவனத்தின் ஹெட்ஜ் பண்ட் முதலீட்டாளர்கள் இந்நிறுவனப் பங்குகளை விற்பனை செய்த நிலையில், ரெட்டிட் தளத்தில் WallStreetsBets (https://www.reddit.com/r/wallstreetbets/) என்ற ஒரு குரூப் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்நிறுவனப் பங்குகள் ஜனவரி மாத துவக்கத்தில் வெறும் 17 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது 1900 சதவீத வளர்ச்சியில் சுமார் 380 டாலர் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

4 டாலர் முதல் 380 டாலர்

4 டாலர் முதல் 380 டாலர்

கடந்த சில நாட்களில் ஏற்பட்ட வர்த்தக மாற்றத்தில் கேம்ஸ்டாப் பங்குகள் தனது உச்ச விலையில் இருந்து சரிந்தாலும், புதன்கிழமை 134.84 சதவீத வளர்ச்சியில் 347.51 டாலருக்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 24 பில்லியன் டாலர் என உச்சத்தை அடைந்துள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு கேம்ஸ்டாப் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெறும் 4 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

நெட்டிசன்ஸ் ஏற்படுத்திய இந்தத் தாக்கமும், கேம்ஸ்டாப் பங்குகளின் தடாலடி வளர்ச்சி குறித்து அமெரிக்கச் சந்தை முதலீட்டாளர்கள் கடுமையான விமர்சனம் செய்து வந்தாலும் தொடர்ந்து இந்நிறுவன பங்குகள் மீது முதலீடுகள் குவிந்து வரும் காரணத்தால் அதிரடி வளர்ச்சியை அடைந்து வருகிறது.

நெட்டிசன்ஸ் அட்டகாசம்

நெட்டிசன்ஸ் அட்டகாசம்

கோம்ஸ்டாப் நிறுவனம் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், குற்றச்சாட்டுகள் இருந்தாலும் ஆன்லைன் கேம் பிரியர்களுக்குக் கேம்ஸ்டாப் பிரியர்களுக்கு இந்நிறுவனத்தைத் தவிர்த்து வேறு சிறந்த கடை இல்லை என்பதால் நெட்டிசன்ஸ் மத்தியில் இந்நிறுவனத்தைக் காப்பாற்ற புதிய புரட்சி வெடித்துள்ளது.

முதலீட்டாளர்கள் ஆதரவு

முதலீட்டாளர்கள் ஆதரவு

இந்த அதிரடியில் பல முன்னணி முதலீட்டாளர்களும், நிறுவனத் தலைவர்களும் கேம்ஸ்டாப் நிறுவனத்தில் முதலீட்டுச் செய்ய உள்ளதாக டிவிட்டர் மற்றும் இதர சமுக வலைத்தளத்தில் பதிவு செய்து வரும் நிலையில், இந்நிறுவனப் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து வருகிறது. சமீபத்தில் சோசியல் கேப்பிடல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Chamath Palihapitiya இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.

எலான் மஸ்க் டிவீட்

எலான் மஸ்க் டிவீட்

மேலும் டெஸ்லா குழுமத்தின் தலைவரான எலான் மஸ்க் தனக்குரிய ஆஸ்தான ஸ்டைலில் ஒரே வார்த்தையில் ரெட்டிட் WallStreetsBets குரூப்-ன் இணைப்பைப் பதிவிட்டு Gamestonk!! எனப் பதிவிட்டு இந்த அதிரடி வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

சமீபத்தில் எலான் மஸ்க் சிக்னல் செயலி குறித்துச் செய்த டிவீட், இந்நிறுவனத்தில் பல கோடி வாடிக்கையாளர்களைப் புதிதாக இணைத்துள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+