வீடியோ கேம் பார்லர்: இப்போ இதுதான் டிரெண்ட்.. செம பிஸ்னஸ் ஐடியா..!!

அபாயம் இல்லாமல் குறைந்த அளவில் முதலீடு செய்து மாதந்தோறும் கணிசமாக சம்பாதிக்க நினைத்தால் உங்களுக்கென சொந்தமாக ஒரு வீடியோ கேம் பார்லர் தொடங்கலாம். இன்றைய இளைய தலைமுறைகள் அதிகம் விரும்பும் ஆன்லைன் கேமிங்-கிற்கு போதுமான கட்டமைப்பு இல்லை.

கொரியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் கசினோக்களை போல கேமிங் பார்லர்கள் உணவகம், தங்குமிடம் போன்ற சேவைகள் உடன் இயங்குவது மட்டும் அல்லாமல் மொத்த கட்டிடத்தையும் ஆன்லைன கேமிங் தளத்திற்கான இடமாக மாற்றி பெரிய வர்த்தகம் வருவாயை பார்த்து வருகிறது.

வீடியோ கேம் பார்லர்: இப்போ இதுதான் டிரெண்ட்.. செம பிஸ்னஸ் ஐடியா..!!

இந்தியாவில் வீடியோ கேம் பார்லரை பதிவு செய்தல், பார்லருக்கான சிறந்த இடம், பணியாட்கள், வியாபத்தை மார்க்கெட் செய்தல், தொழில் அபாயங்களை சமாளித்தல் ஆகிய நடைமுறைகளை சரியாகச் செய்தால் உங்கள் சொந்த வீடியோ கேம் பார்லரை லாபகரமான தொழிலாக மாற்றலாம்.

வீடியோ கேம் பார்லர் தொழிலை சுயமாகத் தொடங்குவது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் வீடியோ கேம் பார்லர்கள் மக்களிடையே சிறப்பான கவனத்தைப் பெற்று வருகிறது. மக்கள் தொகை நிறைந்த இடத்தில் இத்தகையை கேமிங் பார்லரைத் தொடங்கினால் நன்றாக சம்பாதிக்கலாம்.

குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிப்பதற்கு வீடியோ கேம் பார்லர் உதவுகிறது. சிறுவர்கள் மற்றும் டீனேஜர்கள் மத்தியில் கேம் பார்லர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. வீடியோ கேம் பார்க்காத குழந்தைகள் இளம் வயதினரை பார்க்க முடியாது, பெரியவர்களுக்கும் பிடிக்கும், வீடியோ கேம்களில் பல்வேறு வகைகள் உள்ளன.

போர்கள், மல்யுத்தம், கத்தி சண்டை, கார் ரேஸ்கள், பைக் ரேஸ்கள் என பலவிதமான வீடியோ கேம்கள் உள்ளன. இது தவிர விண்வெளி பயணம், விண்வெளியில் ராக்கெட் ரேஸ் போன்ற வீடியோ கேம்களும் உள்ளன. கிரிக்கெட் வீடியோ கேம்களும் வந்துவிட்டன.

புகழ்பெற்ற அணியின் வீரர்கள் பேரிலேயே கிரிக்கெட் வீடியோ கேம்களை ஆடலாம். இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் வீடியோ கேம்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உற்சாகமாக கிரிக்கெெட் கேம்களை விளையாடுகின்றனர்.

வீடியோ கேம் பார்லர்களில் பெரிய ஸ்க்ரீன் வைத்தால் பலதரப்பட்ட ஹை-டெபனிஷன் விளையாட்டுகளை குழந்தைகளும் டீனேஜர்களும் மகிழ்ச்சியோடு ஆடுவார்கள். வீடியோ கேம்கள் அனைத்தும் விளையாடுபவர்களை பரவசமாக்கும்.

வீடுகளில் இந்த வீடியோ கேம் ஸ்டேஷன்களை அமைப்பதற்கு அதிகம் செலவழிக்க வேண்டுமென்பதால் தங்கள் பிள்ளைகளை இதுபோன்ற வீடியோ கேம் பார்லர்களுக்கு அனுப்புகின்றனர்.

தொடக்கத்தில் 2 அல்லது 3 விளையாட்டுகளுடன் வீடியோ கேம் பார்லர்களை ஆரம்பிக்கலாம். பின்னர் விரிவுபடுத்தலாம். கொஞ்சம் கணிசமாக முதலீடு தேவையென்றாலும் சீக்கீரமே சம்பாதித்து விடலாம்.

வீடியோ கேம் பார்லர்: இப்போ இதுதான் டிரெண்ட்.. செம பிஸ்னஸ் ஐடியா..!!

வீடியோ கேம் பார்லர் வைக்க முதலில் ரூ.5 - 50 லட்சம் வரை தேவைப்படலாம், ஒரு சிஸ்டம் வைத்தும் இயக்கலாம், 15 சிஸ்டம் வைத்தும் இயக்கலாம். தினசரி 50 வாடிக்கையாளர்கள் இருக்கும் வரையில் வர்த்தக இடத்தை தேர்வு செய்ய வேண்டும். கட்டமைப்பு செலவுகள் இதில் கணிசமாக அதிகம் என்பதை மறுக்க முடியாது.

இதற்கு வங்கிக் கடனும் கிடைக்கிறது. லாப மார்ஜின் 40 சதவீதம் வரை உள்ளது என்பதால் தாராளமாக வீடியோ கேம் பார்லர்களை தொடங்கலாம். இந்தளவுக்கு நஷ்ட அபாயம் இல்லாத தொழில் வேறு எதுவும் இருக்க முடியாது.

இளம் வயதிலேயே வீடியோ கேம் பார்லர்களைத் தொடங்கி கை நிறைய மகிழ்ச்சியுடன் சம்பாதிக்கலாம். இந்த வீடியோ கேம் பார்லர்களை வைப்பதற்கு இப்போது வங்கிகள் கடனுதவியையும் செய்கின்றன. படித்த பட்டதாரிகள் வேலைக்கு செல்லும்முன்பாக இந்த கேம் பார்லர்களை நடத்தலாம். இல்லத்தரசிகளும் இதில் ஈடுபடலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+