இந்தியாவின் பல பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா இந்த வாரம் தொடங்கி அடுத்த ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஒவ்வொரு ஊர், தெருக்கள் வரையில் மக்கள் ஒன்றாக கூறி பெரும் அளவில் கொண்டாடப்படும் காரணத்தால் மத்திய மாநில அரசு பொது விடுமுறை அறிவிக்கிறது.
ஆனால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நாள் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் 9 நாளில் முதல் நாள் இந்தியாவில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுவது இல்லை. இதனால் பங்குச்சந்தை முதல் வங்கி விடுமுறை முதல் அனைத்தும் மாறுபடுகிறது.

தென் மாநிலங்களான கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் திங்கள்கிழமை முதல் திருவிழா கொண்டாடப்படும், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தொடக்க உள்ளது.
இதனால் இந்திய பங்குச் சந்தையில் பாம்பே பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டும் செப்டம்பர் 19 செவ்வாய் அன்று விநாயக சதுர்த்திக்காக மூடப்பட்டிருக்கும். இதோடு ஈக்விட்டி, ஈக்விட்டி டெரிவேட்டிவ், வட்டி விகித டெரிவேட்டிவ், கரன்சி டெரிவேடிவ்கள் மற்றும் செக்யூரிட்டிகள் கடன் கொடுத்தால் மற்றும் கடன் வாங்குதல் ஆகியவையும் செப்டம்பர் 19 அன்று நிறுத்தப்படும்.
ஆனால் வழக்கம் போல் பொது விடுமுறை நாட்களில் நடப்பது போல் இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் சரக்கு வர்த்தகம் செவ்வாய்கிழமை மாலை 5 மணி முதல் 11:30/11:55 மணி வரை நடைபெறும், இதில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இதேபோல் மாநில வாரியாக வங்கிகளின் மாநில வாரியாக மாறுப்படுகிறது.
விநாயக சதுர்த்தி என்பது விநாயகர் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக உள்ளது, இந்த தினமும் வாழ்விலும், வர்த்தகத்திலும் புதிய துவக்கம் என்று கூறப்படுவதால் புதிதாக வர்த்தகம் செய்பவர்கள், புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இந்த நாள்-ஐ முக்கிய நாளாக கருதுவது வழக்கம்.
விநாயக சதுர்த்தியை தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 24 ஆம் தேதி தசரா, நவம்பர் 14 தீபாவளி, நவம்பர் 27 குருநானக் ஜெயந்தி, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் ஆகிய நாட்களில் பங்குச்சந்தை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications