இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கும் ஓலா தனது கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் பேட்டரி தயாரிப்பை துவங்க ஜிகா பேக்டரி கட்டும் பணியை வேகப்படுத்தி இருக்கும் வேளையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்களின் தொழில்நுட்ப ரீதியாக பல மேம்பாடுகள் பயன்பாட்டு வந்துள்ளது.
ஓலே ஸ்கூட்டரில் இருக்கும் ஸ்பீக்கரில் ஹாரன் மட்டும் இல்லாமல் பாட்டும் கேட்க முடியும் என்பது அனைவரும் தெரியும், ஆனால் சமீபத்தில் செய்யப்பட்ட அப்டேட்டில் பாடலுக்கு ஏற்ப ஸ்கூட்டரில் இருக்கும் அனைத்து லைட்களுகளும் இயங்கும் மாற்று சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இப்படி 4 இளைஞர்கள் இரு ஓலா ஸ்கூட்டரில் குஜராத் மாநிலத்தின் பாரம்பரியமான இசையை பார்ட்டி மோடில் ப்ளே செய்துவிட்டு வாகனங்கள் முன் கர்பா நடனத்தை ஆடி வீடியோ பதிவிட்ட நிலையில் பெரிய அளவில் டிரெண்டானது.
இந்த வீடியோ-வை டிவிட்டரில் பதிவிட்ட பவ்யா ராஜ்ஷின் ஓலா நிறுவனர் பாவிஷ் அக்ரவால்-ஐ டேக் செய்த நிலையில், இதை பார்த்த பாவிஷ் உடன் ரீடிவீட் செய்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ பார்க்கவே ஜாலியாக உள்ளது, காலியான சாலையில் லைட் செட்அப் உடன் பாட்டு போட்டுக்கொண்டு 4 நண்பர்கள் ஆடும் வீடியோவை பார்க்கும் போது ஊர் திருவிழா-வில் நண்பர்கள் உடன் ஆடிய ஆட்டம் தான் நினைவுக்கு வருகிறது.
நீங்களும் ஓலா ஸ்கூட்டர் வைத்திருந்தால் இந்த பார்ட்டி மோட்-ஐ எப்படி பயன்படுத்தி ஜாலி பண்ணுவது என தெரிந்துக்கொள்ள ஓலா வீடியோ கடந்த அப்டேட் வெளியிட்ட போது யூடியூப்-ல் வெளியிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications