இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் புதிய திருப்பமாக, சில மாதங்களுக்கு முன்பு ஐடி மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மட்டுமின்றி, உற்பத்தி துறையிலும் தனது கால்தடம் பதித்துள்ள கூகுள். தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் ட்ரோன்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது கூகுள்.
இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் இருக்கும் பிற ட்ரோன் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முக்கியமான திட்டங்களைக் கையில் எடுத்துள்ளது.

இதில் முக்கியமாக இந்தியாவின் முன்னணி ட்ரோன் நிறுவனங்களில் ஒன்றான கருடா ஏரோஸ்பேஸ், அண்மையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் நடத்திய சந்திப்பில், இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன்களை உருவாக்குவதில் கருடா ஏரோஸ்பேஸ்-ன் பங்களிப்பும், திட்டம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் தற்போது விவசாயம் மற்றும் நுகர்வோர் ட்ரோன் பிரிவின் கிங் மேக்கராக இருக்கும் கருடா ஏரோஸ்பேஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன்களை தயாரிப்பதிலும், டிசைன் செய்வதிலும் முக்கிய இடத்தை பிடித்து ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த நிலையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஜெயபிரகாஷ், சென்னையில் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தும் ட்ரோன் விமானங்களை கட்டமைக்க ஒரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் விவாதித்தார்.
சென்னையில் அமைக்கப்படும் இந்த புதிய தொழிற்சாலை 30,000 சதுர அடி பரப்பளவில் அதிநவீன ட்ரோன் டிசைன், உற்பத்தி மற்றும் சோதனை வசதிகளை கொண்டிருக்கும். இந்த வசதி, ட்ரோன் துணை அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ட்ரோன் மோட்டார்கள், பேட்டரிகள் மற்றும் ட்ரான்ஸ்மிட்டர்கள் போன்ற முக்கிய உதிரிபாகங்களுக்கான உள்ளூர் உற்பத்தி தளத்தையும் இதில் கொண்டிருக்கும்.
இதுகுறித்து ஜெயபிரகாஷ் கூறுகையில் இந்தியாவை 2030 ஆம் ஆண்டிற்குள் ட்ரோன் ஹப் ஆக மாற்றும் இலக்கை பற்றி விவாதிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன்.
உலக நாடுகளுக்கு இந்தியாவின் ட்ரோன் தயாரிப்புகளைக் கருடா ஏரோஸ்பேஸ் உருவாக்கி ஏற்றுமதி செய்யவும். இதில் பாதுகாப்புத் துறைக்கான பயன்பாடுகள் திட்டத்தை அமைச்சர் மிகவும் பாராட்டினார் என தெரிவித்தார்.
இந்திய பாதுக்காப்பு துறைக்கான அனைத்து விதமான ஆயுதங்களையும், தடவாளங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பது மூலம் அரசின் இறக்குமதி செலவுகள் குறைக்கப்பட்டு, அரசின் நிதி பற்றாக்குறை இலக்கையும், வேலைவாய்ப்பு இலக்கையும் இதன் மூலம் அடைய திட்டமிட்டு உள்ளது. இதனால் பாதுகாப்புத் துறை சார்ந்த அனைத்து உற்பத்தி திட்டங்களையும் மத்திய அரசு கூர்ந்து கவனித்து ஒப்புதல் அளித்து வருகிறது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications