கொரோனா வெறியாட்டம்.. 15 நாளில் பெட்ரோல், டீசல் விற்பனை 20% சரிவு.. அரசு பெரும் நஷ்டம்..!

மே மாதம் துவங்கியதில் இருந்து கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முழு லாக்டவுன் அறிவிக்கப்படும் வரும் காரணமாக தொழிற்துறை, உற்பத்தி, வர்த்தகம், போக்குவரத்து என அனைத்தும் முடங்கியுள்ளது.

இதன் வாயிலாக ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களை ஒப்பிடுகையில், மே 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை என்பது சுமார் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் விமான எரிபொருள் விலை விற்பனை 38 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்துள்ளதால் மத்திய மாநில அரசுக்கு எரிபொருள் விற்பனை மூலம் கிடைக்கும் வரி வருவாய் என்பது பெரிய அளவில் பாதித்துள்ளது.

 எரிபொருள் விற்பனை 7 மாத சரிவு

எரிபொருள் விற்பனை 7 மாத சரிவு

இந்தியாவில் அதிகளவில் எரிபொருள் பயன்படுத்தும் போக்குவரத்துத் துறை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு காரணமாகப் பெரிய அளவில் பாதித்துள்ளது. மே மாதம் மட்டும் சரக்கு போக்குவரத்து என்பது 50 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக இந்தியப் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பின் தலைவர் எஸ்பிஐ சிங் தெரிவித்துள்ளார்.

 MSME துறை அதீத பாதிப்பு

MSME துறை அதீத பாதிப்பு

இதேபோல் பெரும்பாலான சரக்கு போக்குவரத்து சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களில் இருந்து தான் கிடைக்கும். கொரோனா தொற்றாலும், லாக்டவுன் அறிவிப்பாலும் MSME துறை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளதால் வெறும் 55 லட்சம் டிரக்குகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.

 சாலை போக்குவரத்து

சாலை போக்குவரத்து

இந்தப் பாதிப்புகளால் இந்தியாவில் சாலை போக்குவரத்துப் பிரிவில் பயன்படுத்தும் எரிபொருள் விற்பனை சுமார் 7 மாத சரிவை அடைந்துள்ளது. மேலும் ஒரு நாள் சராசரி விற்பனை அளவீடு என்பது 53,300 டன்னாகக் குறைந்துள்ளது.

 பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

மேலும் இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிலைப்பெற்று உள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 94.31 ரூபாய்க்கும், டீசல் : 88.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+