நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2022-23 ஆம் நிதியாண்டில் சாலை கட்டுமான இலக்கை 2022ஆம் நிதியாண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
ஒருபக்கம் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்திய அரசு நாட்டின் போக்குவரத்துத் துறை மேம்படுத்துவதன் மூலம் கூடுதலான வேலைவாய்ப்புகளையும், வர்த்தகத்தையும் உருவாக்க முடியும் என நம்புகிறது.
இதன் வாயிலாகவே சாலை கட்டுமான இலக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
மோடி அரசு
இன்று மோடி அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிக்கையில் கதி சக்தி திட்டத்தின் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலையை 25,000 கிலோமீட்டர் வரையில் விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கு 20,000 கிலோ மீட்டர் சாலை கட்டமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
கதி சக்தி திட்டம்
கதி சக்தி திட்டத்தை ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் சுமார் 16 அமைச்சகங்களும் டிஜிட்டல் பிளாட்பார்ம் ஆன கதி சக்திக்குக் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் மூலம் இந்தியாவில் உள்கட்டமைப்புத் திட்டங்களை டிஜிட்டல் முறையிலேயே திட்டமிடல் முதல் ஒப்புதல் அளிக்கும் வரையிலான பணிகளைச் செய்ய முடியும்.
25000 கிலோமீட்டர் சாலை
கதி சக்தி திட்டத்தின் உதவியுடன் 2022-23 ஆம் நிதியாண்டில் 25000 கிலோமீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலையை விரைவாக அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு.
பொருளாதார ஆய்வறிக்கை
பொருளாதார ஆய்வறிக்கையின் படி 2020ஆம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் 10,237 கிலோமீட்டராக இருந்த நிலையில், 2021ஆம் நிதியாண்டில் 30.2 சதவீதம் வரையில் அதிகரித்து 13.327 கிலோமீட்டராக உயர்ந்தது.
2023 டார்கெட்
நடப்பு நிதியாண்டில் அதாவது 2022ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் 3,824 கிலோமீட்டர் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2023ஆம் நிதியாண்டின் முடிவிற்குள் 25,000 கிலோமீட்டர் தொலைவிலான சாலையை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
7 லட்சம் கோடி ரூபாய்
25000 கிலோமீட்டர் இலக்கை அடைய 2023ஆம் நிதியாண்டில் மத்திய அரசு தினமும் 70 கிலோமீட்டர் சாலையை அமைக்க வேண்டும். இதற்காக 2022 முதல் 2024ஆம் நிதியாண்டு வரையிலான சாலை கட்டுமான திட்டத்திற்கு மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத் துறை சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications