பிரதமர் மோடி இன்று நாட்டின் உள்கட்டுமான திட்டங்களை வேகமாகச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல்முனை இணைப்பு திட்டமான கதிசக்தி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் போக்குவரத்து வசதிகளையும் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்த அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கப் பல திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செய்திருந்தாலும், இதை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த GatiShakti.
பொருளாதாரப் பகுதிகள் இணைப்பு
இந்தியா முழுவதும் இருக்கும் பொருளாதாரப் பகுதிகள் அதாவது டெக்ஸ்டைல் கிளஸ்டர், பார்மா கிளஸ்டர், டிபென்ஸ் காரிடார்ஸ், எலக்ட்ரானிக் பூங்கா, தொழிற் பூங்காக்கள், மீன் பிடி தளங்கள், விவசாயப் பகுதிகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
சரக்கு போக்குவரத்து
இப்படி இணைப்பதன் மூலம் வர்த்தகம் மேம்படுவது மட்டும் அல்லாமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வரும் காலம் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் காலத்தை அதிகளவில் குறைக்க முடியும். இதேபோல் குறைந்த செலவிலும், வேகமாகவும் உற்பத்தி பொருட்களை உரியை திட்டத்தில் கொண்டு சேர்க்க முடியும்.
இன்பரா திட்டங்கள் தாமதம்
இந்த இலக்குகளை அடையப் பல கட்டுமான திட்டங்கள் வகுக்கப்பட்டு இருந்தாலும், பல்வேறு அரசு அமைப்புகள் ஒப்புதல், அனுமதி அளிக்க வேண்டும் என்பதால் அதிகளவில் தாமதமாகிறது.
கப்பல் முதல் விமானம் வரை
இந்தப் பிரச்சனையை தீர்க்கவே கப்பல் போக்குவரத்துத் துறையில் இருந்து விமானப் போக்குவரத்து வரையில் அனைத்துத் துறை திட்டங்களையும், தனியார் மற்றும் அரசு அமைப்புகள் ஓரே இடத்தில் சேர்ந்து ஏலம் மூலம் ஒப்புதல் வரையிலான அனைத்து பணிகளை ஓரே இடத்தில் செய்யக் கதிசக்தி என்ற centralised portal உருவாக்கப்பட்டு உள்ளது.
தேசிய இன்பராஸ்ட்ரக்சர் பைப்லைன்
இந்தத் திட்டம் மூலம் மத்திய அரசின் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய இன்பராஸ்ட்ரக்சர் பைப்லைன் திட்டத்தை வேகப்படுத்த முடியும். கதிசக்தி திட்டம் மூலம் அடுத்த 25 வருட இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளார் பிரதமர் மோடி.
வருமான வரித் தளம்
ஆனால் இதேவேளையில் மத்திய அரசு வருமான வரித் தளத்தை மேம்படுத்த திட்டமிட்டு பல பிரச்சனைகளைச் சந்தித்த நிலையில் மக்களுக்கு வருமான வரி செலுத்த 6 மாத கால நீட்டிப்பு அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டத்தில் ஈடுபடும் பல அரசு அமைப்புகளை எப்படி ஓரே தளத்திற்குள் கொண்டு வர முடியுமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications