அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான நாளில் இருந்து கடும் சரிவினைக் கண்டு வந்தது. இதனால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது பாதியளவு சரிவினைக் கண்டது. இதன் காரணமாக கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பும் சரிவினைக் கண்டது. இதன் காரணமாக 2வது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டார்.
எனினும் தற்போது கெளதம் அதானி மீண்டும் பற்பல காரணிகளுக்கு மத்தியில் ஏற்றம் கண்டு வருகின்றது.
இதற்கிடையில் கெளதம் அதானி மீண்டும் டாப் 20-க்குள் நுழைந்துள்ளார். இவரின் தற்போதைய இடம் 17வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதானியின் நிகர மதிப்பு அதிகரிப்பு
சர்வதேச அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பெரும் சரிவினைக் கண்டு இருந்த அதானி, இன்று பங்கு விலையானது ஏற்றம் கண்டுள்ள நிலையில், அதானியின் சொத்து மதிப்பானது அதிகரித்துள்ளது. அதிக லாபம் ஈட்டியவர்களில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.
அதானி எண்டர்பிரைசஸ்
கடந்த ஜனவரி 17, 2023ல் அதானி குழுமம் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் இருந்தார். எனினும் அவர் பின்னர் டாப் 20 இடத்திற்கு கீழாக தள்ளப்பட்டார்.
இதற்கிடையில் இன்று அதானி குழும பங்குகள் 25% வரையில் ஏற்றம் கண்டன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, 25% அதிகரித்து, 1965.50 ரூபாயாக உச்சம் தொட்டது.
அதானி போர்ட்ஸ் & அதானி வில்மர்
இதே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 9.64% அதிகரித்து, 598.70 ரூபாயாக உச்சம் தொட்டது. அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி வில்மர் உள்ளிட்ட இரு நிறுவனங்களும் அப்பர் சர்க்யூட் ஆகி 1324.45 ரூபாய் மற்றும் 399.40 ரூபாய் முறையே அப்பர் சர்க்யூட் ஆகி உச்சம் தொட்டிருந்தன.
மோசமான சரிவு
அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது வெளியானதில் இருந்தே மிக மோசமான சரிவினைக் கண்ட அதானி குழும பங்குகள், இன்னும் கூட தெளிவான ஒரு கட்டமைப்புகள் வரவில்லை என்றே கூறலாம். எனினும் அதானி குழுமத்தின் தீவிரமான பல முயற்சிகளுக்கு மத்தியில் அதானி குழும பங்குகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.
அதானி போர்ட்ஸ் லாபம்
இந்த ஏற்றம் இனி இப்படியே தொடருமா? இழந்த 118 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பினை எப்படி ஈடுகட்ட போகிறது.
அதானி போர்ட்ஸ் நிறுவனம் டிசம்பர் 2022 காலாண்டில் 16% சரிவினைக் கண்டு, ஒருங்கிணைந்த நிகரலாபமாக 1315.54 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 1567.01 கோடி ரூபாயாக இருந்தது.
அதானி டிரான்ஸ்மிஷன் லாபம்
இதே அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 77.8% அதிகரித்து, 474.72 கோடி ரூபாபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டி; 267.03 கோடி ரூபாயாக இருந்தது. சர்வதேச அளவில் மந்தமான நிலை இருந்து வரும் நிலையிலும்,நல்ல வளர்ச்சியினை எட்டியுள்ளதாக அதானி குழுமம் விளக்கம் கொடுத்துள்ளது.
கெயினர்ஸ் பட்டியல்
அதானி மட்டும் அல்ல, கெயினர்ஸ் பட்டியலில் எலான் மஸ்க் 3 பில்லியன் டாலர் மதிப்பினை சேர்த்தும், தடாஷி யானாய் 78 மில்லியன் டாலரும், ரவி ஜெய்ப்ரியா 675 மில்லியன் டாலரும், லோ டக் குவாங் 648 மில்லியன் டாலரும் லாபம் ஈட்டியுள்ளனர் என்பதை போர்ப்ஸ் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடம் பெற்றுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications