Gautam Adani: சொன்னபடி சங்கி நிறுவனத்தை வாங்கியாச்சு.. சிமெண்ட் உற்பத்தி 'கிங்' அதானி..!

சந்தை மதிப்பீட்டின் படி இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் அம்புஜா சிமென்ட்ஸ், தமிழ் குட்ரிட்டன்ஸ் நேற்று வெளியிட்டதை போல் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல சிமென்ட் உற்பத்தி நிறுவனமான சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்கியுள்ளார்.

இன்று அதாவது ஆகஸ்ட் 3 ஆம் தேதி, அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அதானி குரூப் மற்றும் சங்கி இண்டஸ்ட்ரீஸ் பங்கு விற்பனை குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது மட்டும் அல்லாமல், பங்கு விற்பனைக்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு உள்ளனர்.

Gautam Adani: சொன்னபடி சங்கி நிறுவனத்தை வாங்கியாச்சு.. சிமெண்ட் உற்பத்தி 'கிங்' அதானி..!

அதானி குழுமத்திற்கு சொந்தமான அம்புஜா சிமென்ட்ஸ், சங்கி இண்டஸ்ட்ரீஸ்-ன் ப்ரோமோட்டர்களான ரவி சங்கி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து 56.74 சதவீத சங்கி இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு 114.22 ரூபாய் என்ற விலையில் வாங்கு உள்ளது அம்புஜா சிமென்ட்ஸ். இந்த முக்கியான வர்த்தகத்தின் மூலம் சங்கி இண்டஸ்ட்ரீஸ் சுமார் 5000 கோடி ரூபாயில் மதிப்பிடப்பட்டு உள்ளது. அதானி குழுமம் இந்த தொகையை தனது உள்நிர்வாக நிதி திரட்டல் மூலம் செலுத்த உள்ளது.

கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் சுமார் 2,837 கோடி ரூபாய்க்கு சங்கி இண்டஸ்ட்ரீஸ்-ன் 56.74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளார். இந்த முக்கிய கையகப்பற்றல் மூலம் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வேகமான வளர்ச்சி பயணத்தில் முக்கிய மைல்கல் என கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் அதானி குழுமம் அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களை வாங்கிய பின், சிமென்ட் துறையில் அதானி குழுமத்தின் மூன்றாவது கையகப்பற்றலாகும். அதானி குழுமம் இன்பரா துறையில் மிகப்பெரிய திட்டங்களை கையில் இருக்கும் வேளையில், இந்தியா மொத்தமும் இன்பரா துறை வளர்ச்சிக்கு முக்கியதுவம் அளிக்கும் வேளையில் அதானி திட்டமிட்டு சிமெண்ட் துறையில் அதிகப்படியான பணத்தை முதலீடு செய்து வருகிறார்.

அம்புஜா சிமென்ட்ஸ், சங்கி இண்டஸ்ட்ரீஸை கையகப்படுத்துவதன் மூலம் அதன் மொத்த சிமென்ட் உற்பத்தித் திறன் வருடாந்திர அடிப்படையில் 9 சதவீதம் அதிகரிக்கும். இதன் மூலம் அதானி குழுமத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தி 73.6 மில்லியன் டன்னாக உயர்த்த முடியும் என்று எதிர்பார்க்கிறது.

Gautam Adani: சொன்னபடி சங்கி நிறுவனத்தை வாங்கியாச்சு.. சிமெண்ட் உற்பத்தி 'கிங்' அதானி..!

இதோடு அதானி குழுமம் பெரிய சரக்கு கப்பல்களை கையாள குஜராத் சங்கிபுரத்தில் உள்ள துறைமுகத்தை விரிவுபடுத்தும் திட்டத்தையும் அறிவித்துள்ளதால், இந்த ஒப்பந்தம் மூலம் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்திற்கு சங்கி இண்டஸ்ட்ரீஸ்-ன் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டன் சுண்ணாம்புக் கல் இருப்பை பயன்படுத்த முடியும்.

அதானி குழுமம் சங்கி இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கியதன் மூலம் குறைவான விலையில் சிமெண்ட் தயாரித்து குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சப்ளை செய்ய முடியும் என கரண் அதானி தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் தடலாடி வளர்ச்சி சிமெண்ட் துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+