அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனவரி 24இல் வெளியான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையில் விவரிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளது.
அதானி நிறுவனம் மீது இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரணை மேற்கொண்டுள்ளது.
இது மட்டும் அல்ல, இப்படி ஏராளமான சர்ச்சைகளில் அதானி குழுமம் சிக்கித் தவித்து வருகின்றது.
சொத்து மதிப்பு சரிவு
இதற்கிடையில் அதானி குழும பங்குகள் பலவும் கடும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளன.
துறைமுகம் முதல் மின்சாரம் வரையிலான வணிகத்தில் வெற்றி கோலோச்சி வரும் கெளதம் அதானி, சமீபத்திய காலமாகவே பற்பல சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகின்றார். இதனால் அதானி நிகர சொத்து மதிப்பானது கடும் சரிவினைக் கண்டுள்ளது.
நிகர மதிப்பு
ஹிண்டர்ன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானியின் நிகர மதிப்பானது ப்ளூம் பிப்ரவரி 14 நிலவரப்படி, 52.4 பில்லியன் டாலராக சரிவினைக் கண்டுள்ளது. இதே போர்ப்ஸ் அறிக்கையின் படி அதானியின் நிகர மதிப்பு 53 பில்லியன் டாலராகவும் உள்ளது.
அதானி மீது குற்றச்சாட்டுகள்
ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது கடந்த ஜனவரி 24 அன்று வெளியான நிலையில், அதில் பங்குகளை உயர்த்த மோசடியான பண பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு, போலியாக பணபரிவர்த்தனை என பல குற்றங்களை சாட்டியது. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டன. அதன் சந்தை மதிப்பும் கடும் வீழ்ச்சியினை சந்தித்தன. தொடர்ந்து இன்று வரையிலும் கூட பல பங்குகளும் சரிவினைக் கண்டு வருகின்றன.
செபி ஆய்வு
அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில், செபி விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. ஆக விரைவில் ஹிண்டர்ன்பர்க்கின் அறிக்கை எந்தளவுக்கு உண்மை என்பது குறித்தான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றம்?
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து செபி பதிலளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் அதானி நிறுவனங்கள் பற்றிய ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செபி அமைப்பு, இந்த வார இறுதியில் சமர்பிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மொரிசியஸின் ஒழுங்குமுறை ஆணையம்
அதானி நிறுவனங்களில், மொரிசியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளன. இவற்றை பற்றி முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட மொரிசியஸின் நிதி சேவைகள் ஒழுங்குமுறை ஆணையம், இவை மொரிசியஸின் சட்ட விதிகள் எதையும் மீறவில்லை என்று அறிவித்துள்ளது.
நிபுணர்கள் கேள்வி
சர்வதேச மதிப்பீட்டு நிறுவனங்கள் கூட அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்தியாவின் பங்கு சந்தை அமைப்புகள் இன்னும் தங்களது அறிக்கையினை வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வியை நிபுணர்கள் முன் வைத்துள்ளனர். இதற்கிடையில் அதானி குழும பங்குகளில் பலத்த ஏற்ற இறக்கம் என்பது தொடர்ந்து இருந்து வருகின்றது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications