உலக பணக்காரர்கள் பட்டியலில் எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தாரோ அதைவிட பல மடங்கு வேகத்தில் சொல்லப்போனால் வெறும் ஒரு மாத காலத்தில் கௌதம் அதானி 3வது இடத்தில் இருந்து 30வது இடத்திற்கு தூக்கி வீசப்பட்டு உள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் சுமார் 80 பில்லியன் டாலருக்கும் அதிகமான சரிவை சந்தித்துள்ளார்.
இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 4 வருடத்தில் 3வது இடம் வரையில் உயர்ந்த கௌதம் அதானி தற்போது வெறும் 39.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் பட்டியல் படி கௌதம் அதானி 39.9 பில்லியன் டாலர் உடன் உலகின் 30வது பெரும் பணக்காரராக உள்ளார், இதேபோல் போர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர் இன்டெக்ஸை பொருத்த வரையில் 33.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 37வது இடத்தில் உள்ளார்.
முகேஷ் அம்பானி
போர்ப்ஸ் பட்டியல் படி முகேஷ் அம்பானி 8வது இடத்தில் 84.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார், கௌதம் அதானி 37வது இடத்தில் வெறும் 33.7 பில்லியன் டாலருடன் உள்ளார். இதன் மூலம் முகேஷ் அம்பானி - கௌதம் அதானிக்கும் மத்தியிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 50 பில்லியன் டாலர்.
வித்தியாசம்
போர்ப்ஸ் பட்டியல் படி முகேஷ் அம்பானி 8வது இடத்தில் 84.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார், கௌதம் அதானி 37வது இடத்தில் வெறும் 33.7 பில்லியன் டாலர் உடன் உள்ளார். இதன் மூலம் முகேஷ் அம்பானி - கௌதம் அதானிக்கும் மத்தியிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 50 பில்லியன் டாலர்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பு கௌதம் அதானி சொத்து மதிப்பில் இதுவரை 80.60 பில்லியன் டாலர் இழப்பை எதிர்கொண்டது மூலம் உலகின் டாப் 500 பணக்காரர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவராக கௌதம் அதானி உருவெடுத்துள்ளார்.
10 நிறுவனங்கள்
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும் பங்குச்சந்தையில் 10 நிறுவனங்கள் மட்டுமே உள்ளது. இதில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் மற்ற ஒன்பது அதானி குழும நிறுவனங்களும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பு அதிகப்படியான சரிவை சந்தித்துள்ளது.
மோசமான நிறுவனம்
அதானியின் விஷயத்தில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் மூலம் பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரது 10 குழுமப் பங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன, ஜனவரி 24 முதல் BSE500 குறியீட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் அதானி குழுமப் பங்குகள் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.
முக்கிய நிறுவனங்கள் சரிவு
செப்டம்பர் 2022ல் இருந்து கௌதம் அதானி தனது மொத்த சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட நான்கில் மூன்றில் பங்கு குறைத்துள்ளது. ஜனவரி 24 முதல் மும்பை பங்குச்சந்தையில் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் பங்குகள் சுமார் 81 சதவீதம் சரிவடைந்தது, அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் சுமார் 75 சதவீதம் சரிவடைந்தது, அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பங்குகள் சுமார் 74 சதவீதம் சரிவடைந்தது மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகள் சுமார் 61 சதவீதம் சரிவடைந்தது என அதிகப்படியான சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications