ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியாவதற்கு முன்பு கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 90 பில்லியன் டாலருக்கும் அதிகமாக கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். ஆனால் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்ரு 40 பில்லயன் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு ஆசியாவின் டாப் 10 பில்லியனர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு வைத்து குற்றச்சாட்டுகளை விசாரிக்க செபிக்கு சுப்ரீம் கோர்டு உத்தரவிட்ட நிலையில், செபி-யின் விசாரணையின் போக்கை கண்காணிக்க சிறப்பு குழுவையும் நியமித்துள்ளது.

இந்த சிறப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் இதுவரையில் செய்யப்பட்ட விசாரணையில் அதானி குழுமம் பங்கு விலையை உயர்த்த முறைகேடு செய்திருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இது தற்காலிகமாக அதானி குழுமத்திற்கு சாதகமாக அமைந்த நிலையில் அதானி குழும பங்குகள் கடந்த 5 நாட்களில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து கௌதம் அதானிக்கு ராஜ யோக காலம் துவங்கியதற்கு ஆதாரமாக விளங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 64.2 கோடி ரூபாயார உயர்ந்து ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்-ல் 18வது இடத்தை பிடித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழு வெளியிட் அறிவிப்பை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமாக இருக்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் மட்டும் 39.41 சதவீதம் உயர்ந்தது.

இந்த தடாலடி உயர்வை பணமாக்க முடிவு செய்த ரீடைல் முதலீட்டாளர்கள் புதன்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான அதான் எண்டர்பிரைசர்ஸ் பங்குகளை விற்பனை செய்ய துவங்கினர். இதனாலேயே அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்தது.
புதன்கிழமை வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவு மற்றும் வியாழக்கிழமை பதிவான கணிசமான உயர்வு ஆகியவை சேர்ந்து ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் பட்டியலில் 63 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 18வது இடத்திலும், போர்ப்ஸ் பில்லியனர் இன்டெக்ஸ் படி 54.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 24வது இடத்திலும் உள்ளார்.
வியாழக்கிழமை வர்த்தக முடிவுடன் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள அதானி குழும நிறுவன பங்குகள் கடந்த 5 நாட்களில் பதிவான உயர்வு.
அதானி எண்டர்பிரைசஸ் - 33.83 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 8.87 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 19.21 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 23.51 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 16.96 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 25.67 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 21.02 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 3.19 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 4.84 சதவீதம் உயர்வு
NDTV - 24.28 சதவீதம் உயர்வு


Click it and Unblock the Notifications