2021 முடியும் வேளையில் இந்திய பணக்காரர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் உருவாகியுள்ளது. ஆம் வழக்கம் போல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்ப உறுப்பினர்கள் உடன் முதல் இடத்தில் இருந்தாலும், இந்த வருடம் அதிகம் சம்பாதித்தது, முதல் இடத்திற்கு அம்பானி உடன் போட்டிப்போடும் கௌதம் அதானி தான்.
கௌதம் அதானி
இந்தியாவில் 2வது பெரும் பணக்காரர் ஆக விளங்கும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 41.5 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்துள்ளது. ஆனால் முகேஷ் அம்பானி வெறும் 13 பில்லியன் டாலர் மட்டுமே இந்த ஆண்டு சம்பாதித்துள்ளார்.
டாப் 10 பணக்காரர்கள்
இந்தியாவில் டாப் 10 பணக்காரர்கள் மட்டும் அல்லாமல் யாராலும் 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு ஓரே வருடத்தில் வளர்ச்சி அடையவில்லை. இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் மத்தியில் புதிய ஒரு வருட வரலாற்று வளர்ச்சி சாதனையைக் கௌதம் அதானி படைத்துள்ளார்.
கௌதம் அதானி சொத்து மதிப்பு
2021ஆம் ஆண்டு மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து மொத்த சொத்து மதிப்பின் அளவு 75.3 பில்லியன் டாலராக உள்ளது. இந்தத் தடாலடி உயர்வுக்கு அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகளின் 245% வளர்ச்சியும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகளின் 288% வளர்ச்சியும், அதானி டோட்டல் கேஸ் பங்குகளின் 351.42% வளர்ச்சியும் தான் காரணம்.
முகேஷ் அம்பானி
இதேவேளையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி-யின் சொத்து மதிப்பு இந்த வருடம் 13 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே வளர்ச்சி அடைந்து மொத்த சொத்து மதிப்பு 89.7 பில்லியன் டாலராக உள்ளது.
அசிம் பிரேம்ஜி
மேலும் முகேஷ் அம்பானியை விடவும் விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அசிம் பிரேம்ஜி-யின் சொத்து மதிப்பு இந்த வருடம் 15.8 பில்லியன் டாலர் வளர்ச்சி அடைந்து 41.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ராதாகிஷன் தமனி
இதேபோல் டிமார்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ராதாகிஷன் தமனியின் சொத்து மதிப்பு 9.51 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து 24.4 பில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளது.
கௌதம் அதானி - முகேஷ் அம்பானி
இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பாகுபாலி படத்தில் பல்வால்தேவன்-க்கு ராஜா பதவி கொடுக்கப்பட்டாலும் மகேந்திர பாகுபலி-க்கு அதிக ஆதரவு இருக்கும். இதேபோலத் தான் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருந்தாலும் அதிகம் சம்பாதித்தது கௌதம் அதானி தான்.
இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2021
- முகேஷ் அம்பானி - 90.5 பில்லியன் டாலர்
- கௌதம் அதானி & குடும்பம் - 78.2 பில்லியன் டாலர்
- சிவ நாடார் - 31.8 பில்லியன் டாலர்
- ராதாகிஷன் தமானி - 22.6 பில்லியன் டாலர்
- லட்சுமி மிட்டல் - 18.8 பில்லியன் டாலர்
- சைரஸ் பூனவல்லா - 17.7 பில்லியன் டாலர்
- சாவித்ரி ஜிண்டால் & குடும்பம் - 17.2பில்லியன் டாலர்
- குமார் பிர்லா - 16.3 பில்லியன் டாலர்
- உதய் கோடக் - 14.8 பில்லியன் டாலர்
- திலீப் ஷங்வி - 14.8 பில்லியன் டாலர்
- சுனில் மிட்டல் & குடும்பம் - 14.0 பில்லியன் டாலர்
- அசிம் பிரேம்ஜி - 11.3 பில்லியன் டாலர்
- குஷால் பால் சிங் - 9.9 பில்லியன் டாலர்
- பஜாஜ் சகோதரர்கள் - 9.3 பில்லியன் டாலர்
- அஸ்வின் டானி & குடும்பம் - 9.0 பில்லியன்டாலர்
- முரளி திவி & குடும்பம் - 8.9 பில்லியன் டாலர்
- கோபிகிஷன் தமானி - 8.9 பில்லியன் டாலர்
- குல்தீப் சிங் & குர்பச்சன் சிங் திங்ரா - 8.8 பில்லியன் டாலர்
- ராகுல் பஜாஜ் - 8.2 பில்லியன் டாலர்
- பெனு கோபால் பங்கூர் - 8.2 பில்லியன் டாலர்
- மகேந்திர சோக்சி & குடும்பம் - 7.0 பில்லியன்டாலர்
- ஃபால்குனி நாயர் - 7.0 பில்லியன் டாலர்
- ஹஸ்முக் சுட்கர் & குடும்பம் - 6.5 பில்லியன் டாலர்
- ராகேஷ் ஜுன்ஜுன்வாலா - 6.0 பில்லியன் டாலர்
- மங்கள் பிரபாத் லோதா - 5.5 பில்லியன் டாலர்
- கபில் & ராகுல் பாட்டியா - 5.4 பில்லியன் டாலர்
- ரவி ஜெய்ப்ரியா - 5.4 பில்லியன் டாலர்
- பங்கஜ் படேல் - 5.3 பில்லியன் டாலர்
- அஜய் பிரமல் - 5.1 பில்லியன் டாலர்
- எம்.ஏ.யூசுப் அலி - 5.0 பில்லியன் டாலர்
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications