Hindenburg எஃபெக்ட்.. உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து கீழே இறங்கிய கவுதம் அதானி!

அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் அமைப்பின் ஆய்வறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அதானி குழும பங்குகள் மோசமான சரிவை பதிவு செய்த நிலையில் திங்கட்கிழமை வரையிலான 3 நாள் வர்த்தகத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு 5 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

இதன் மூலம் அதானி குழுமத்தில் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் பெரிய அளவிலான ஓட்டை விழுந்துள்ளது மட்டும் அல்லாமல் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அதானி வெளியேற்றப்பட்டார்.

அதானி குழுமம்

அதானி குழுமம்

இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ள வேளையில், பட்டியலிடப்படாத பல நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கொண்ட நிறுவனங்களும் உள்ளது, உதாரணமாக அதானி ஏர்போர்ட்ஸ்.

ஐபிஓ திட்டம்

ஐபிஓ திட்டம்

அதானி குழுமம் தனது 5-6 நிறுவனங்களை அடுத்தச் சில வருடத்தில் ஐபிஓ வெளியிட்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிட்டு இருக்கும் வேளையில் ஹிண்டன்பர்க் அறிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் அதானி

கௌதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது மட்டும் அல்லாமல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடம் வரையில் முன்னேறினார், ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி 3 நாளில் டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ராக்கெட் வேக வளர்ச்சி

ராக்கெட் வேக வளர்ச்சி

இது கௌதம் அதானியின் ராக்கெட் வேக வளர்ச்சியில் முதல் தடையாகப் பார்க்கப்படுகிறது. கௌதம் அதானி வளர்ச்சியை உலகமே வியர்ந்து பார்த்து வந்த நிலையில் 110 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சொத்து மதிப்புடன் உலகளவிலான போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்தார்.

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், முறைகேடுகள், கணக்கியல் மோசடிகள் குறித்துப் புகார் ஆகியவற்றின் மூலம் பணக்காரர்கள் பட்டியலில் 11 வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

அதானி எண்டர்பிரைசர்ஸ்

அதானி எண்டர்பிரைசர்ஸ்

இந்த நிலையில் தான் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் உயர்வின் காரணமாகக் கௌதம் அதானி சொத்து மதிப்பு 86.2 பில்லியன் டாலராக மீண்டு 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கௌதம் அதானி 11 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முகேஷ் அம்பானி 84.4 பில்லியன் டாலருடன் 9வது இடத்தில் சாலிடாக உள்ளார். கௌதம் ஆதானியின் தடுமாற்றம் பில்லியனர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதானி எண்டர்பிரைசர்ஸ் FPO

அதானி எண்டர்பிரைசர்ஸ் FPO

மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள விஷயங்களும் கார்ப்பரேட் உலகில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதன் எதிரொலியாக அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO திட்டத்திற்கு இன்று காலை வர்த்தகத்தில் 6 சதவீத பங்குகளுக்கு முதலீடு பெற்று உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+