இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் என்ற உடனே அனைவரின் நினைவுக்கும் வருவது அதானி குடும்பம் தான். பெட்ரோ கெமிக்கல் ,ஃபேஷன், மீடியா, தொலைதொடர்பு என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக தொழில் புரிந்து வருகிறது அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்.அந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தான் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தார்.
முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக மட்டும் அல்ல ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராகும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 19வது இடத்திலும் இருந்து வந்தார். இந்நிலையில் அதானி குழும தலைவர் கெளதம் அதானி , முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி இந்த முதலிடத்தை பிடித்து விட்டார். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் பில்லியினியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி கௌதம் அதானி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். ப்ளூம்பெர்க் தரவுகளின் படி பார்க்கும்போது கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 92.6 பில்லியன் டாலர்களாக (ரூ. 85,52,61,03,00,000.00) இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் மற்றும் உலக அளவில் 19-வது பெரிய பணக்காரர் என்ற பெருமை கௌதம் அதானிக்கு கிடைத்திருக்கிறது.
முகேஷ் அம்பானியை பொறுத்தவரை 90.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 84,22,74,42,00,000.00) சொத்து மதிப்போடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக திகழ்கிறார். அதாவது முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் ,இரண்டாவது இடத்திலிருந்து அதானி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
அதானியின் சொத்து மதிப்பு இந்த அளவுக்கு உயர்வதற்கு முக்கிய காரணம் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் அனைத்துமே கடந்த ஓராண்டு காலமாக சிறந்த அளவில் வருவாய் ஈட்டியுள்ளன, பங்குச்சந்தையிலும் இவற்றின் மதிப்பு உயர்ந்துள்ளன. அதாவது கடந்த ஓராண்டு காலத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் கூடுதலாக 8.1 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளது. அதே வேளையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 16.9 பில்லியன் டாலர்கள் சரிவடைந்து இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தது சென்செக்ஸ் வீழ்ச்சி இதற்கு முக்கிய காரணம்.
அதானிக்கு அவரது நிறுவன பங்குகள் உயர்ந்ததன் மூலம் மட்டும் ஒரே நாளில் 3.56 பில்லியன் டாலர்கள் சொத்து சேர்ந்ததாம். இது தான் வேகமாக அவர் முதலிடத்தை பிடிக்க காரணமாகி இருக்கிறது. அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் மின் உற்பத்தி, புதுப்பிக்கதக்க எரிசக்தி, துறைமுக மேலாண்மை, விமான நிலைய மேலாண்மை, சிமெண்ட் என பலதுறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.அதே வேளையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். எலான் மஸ்கின் சொத்து சொத்து மதிப்பு 656 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications