இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் அதானி குழுமம் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் நிலையில், புதிதாக ஆட்டோமொபைல் துறையில் இறங்கத் திட்டமிட்டு உள்ளார்.
இந்திய ஆட்டோமொபைல் துறை பல வகையில் மாறி வரும் நிலையில், புதிய மற்றும் பசுமை எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களைத் தயாரிப்பதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் அதானி குழுமமும் இப்போட்டியில் இறங்கியது மட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் துறையில் அதிகாரப்பூர்வமாக இறங்கியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் இன்று அசோக் லேலண்ட் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த பல்லார்ட் பவர் ஆகியவற்றுடன் மைனிங் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தும் கனரக வாகனங்களான லாரிகளை மாற்று எரிபொருளில் இயக்கும் புதிய திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
3 நிறுவன கூட்டணி
அதானி எண்டர்பிரைசஸ், அசோக் லேலண்ட், பல்லார்ட் பவர் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து ஹைட்ரஜன் எரிபொருள் செல் எலக்ட்ரிக் டிரக்கை (எஃப்சிஇடி) உருவாக்குவதற்கான பைலட் திட்டத்தைத் தொடங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
பல்லார்ட் நிறுவனம்
PEM எரிபொருள் செல் எஞ்சின் உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் பல்லார்ட் நிறுவனம் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கும் டிரக்கிற்கான FCmoveTM பியூயல் செல் இன்ஜின்-ஐ வழங்குகிறது.
அசோக் லேலண்ட்
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்கும் அசோக் லேலண்ட், வாகனங்களைத் தயாரிப்புக்கான தளம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளது. இக்கூட்டணியில் உருவாகும் hydrogen Fuel Cell Electric Truck இந்தியாவில் 2023 இல் தொடங்கப்பட உள்ளது.
மைனிங் டிரக்
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் மைனிங் டிரக் 55 டன் எடையும், மூன்று ஹைட்ரஜன் டேங்குகளையும், 200-கிமீ வரையில் இயங்கும் ரேஞ்ச் கொண்டு இயங்கும். மேலும் இந்த டிரக் Ballard நிறுவனத்தின் 120 kW PEM பியூயல் செல் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும்.
50 பில்லியன் டாலர்
கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமம் ஏற்கனவே கிரீன் ஹைட்ரஜன் மற்றும் அதனுடன் தொடர்புடைய வர்த்தக அமைப்புகளில் அடுத்த பத்து ஆண்டுகளில் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதானி எண்டர்பிரைசர்ஸ்
ஹைட்ரஜன் எரிபொருள் இயங்கும் சுரங்க டிரக்கை-ஐ ஆசியாவின் முதல் கூட்டணி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அதானி எண்டர்பிரைசர்ஸ் சுரங்க தொழிலில் மட்டும் அல்லாமல் கிரீன் ஹைட்ரஜன் வாங்கவும், விற்கவும், பெட்ரோல் பங்குகளைப் போல ஹைட்ரஜன் ஸ்டேஷன்களை உருவாக்க உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications