இந்தியாவின் 2வது பெரும் பணக்கராரக கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி இன்ஃப்ரா, இந்திய கட்டுமானத் துறையில் புதிய முதலீடு செய்துள்ளது. அதானி இன்ஃப்ரா, குஜராத்தின் முன்னணி கட்டுமான நிறுவனமான பிஎஸ்பி புராஜெக்ட்ஸில் 30.07% பங்குகளை 685 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தப் பங்குகளை பிஎஸ்பி புராஜெக்ட்ஸின் நிறுவனர் மற்றும் முக்கிய பங்குதாரரான பிரகலாத்பாய் எஸ். படேல்-யிடம் இருந்து வாங்கப்படும் என அதானி இன்பரா தெரிவித்துள்ளது. இந்த பங்கு கையகப்படுத்துதல், அதானி குழுமத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பிஎஸ்பி புராஜெக்ட்ஸ் நிறுவனம் தொழில்துறை, நிறுவன, குடியிருப்பு மற்றும் சொகுசு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாகப் பிரபலமான சூரத் வைர பங்குச் சந்தை கட்டிடத்தைக் கட்டியதும் இந்த நிறுவனம் தான்.
அதானி தாராவி பகுதியை மேம்படுத்தும் மாபெரும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது, மட்டும் அல்லாமல் பல முக்கிய டெக் பார்க், வணிக வளாகங்களைக் கட்டி வரும் வேளையில் பிஎஸ்பி புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் கைப்பற்றல் பல இடத்தில் பெரும் லாபத்தையும், வலிமையும் அதானி குழுமத்திற்குச் சேர்க்கும்.
பிஎஸ்பி புராஜெக்ட்ஸ், செப்டம்பர் 30 நிலவரப்படி 6,546 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பணிகளை தற்போது செயல்படுத்தி வருகிறது. அதானி இன்பரா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பிஎஸ்பி புராஜெக்ட்ஸ் பங்குகளை 575 ரூபாய் மதிப்பில், அதாவது செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவின் விலையை விட 15% குறைவான விலையில் 30 சதவீத பங்குகளை வாங்குகிறது.


Click it and Unblock the Notifications