இந்திய கட்டுமானம் மற்றும் சிமெண்ட் தயாரிப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம் அடுத்தடுத்து தனது வர்த்தகத்தை வலுப்படுத்த தன்னிடம் இருக்கும் மலைபோன்ற நிதி ஆதாரத்தைப் பயன்படுத்தி இத்துறையில் இருக்கும் போட்டி நிறுவனங்களை வாங்கி வருகிறது. அந்த வகையில் அதானி குழுமம் தற்போது கட்டுமானத் துறையில் பிரபலமான ஒரு EPC பிரிவு நிறுவனத்தை வாங்க முடிவு செய்து களத்தில் இறங்கி இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணித்து வருகிறது.
இந்தியாவின் முன்னணி உள்கட்டமைப்பு குழுமமான அதானி குழுமம், கடந்த சில வருடங்களாக சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்றி வந்த நிலையில் தற்போது உள்கட்டமைப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற கௌதம் அதானி முடிவு செய்துள்ளார்.

முன்னணி பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான (EPC) நிறுவனமான ITD சிமென்டேஷன் இந்தியா நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தைக் கைப்பற்றினால் அதானி குழுமத்தின் சொந்த சிவில் இன்ஜினியரிங் திறன்களை மேம்படுத்த முடியும்.
இதன் வாயிலாக அதானி குழுமம் எடுக்கும் அனைத்து விதமான கட்டுமான திட்டங்களைத் திறம்பட முடிப்பது மட்டும் அல்லாமல் பெரும் லாபத்தை பெற உதவும். இதோடு உள்கட்டமைப்பு திட்டங்களின் போர்ட்ஃபோலியோவை கூடுதலாக விரிவுபடுத்தவும் அதானி குழுமத்தால் முடியும். அதானி உள்கட்டமைப்பு போர்ட்போலியோவில் விமான நிலையம், நெடுஞ்சாலை, துறைமுகம், பவர் பிளான்ட், ரியல் எஸ்டேட் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
அதானி குழுமம் ITD சிமென்டேஷன் இந்தியா நிறுவனத்தில் முதல் கட்டமாக 46.64% பங்கை கையகப்படுத்தும் போட்டியில் முன்னணி வகிக்கிறது. சுமார் 700 மில்லியன் டாலர் அதாவது 5,888.57 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் விரைவில் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தில் கூடுதலாக 26% பங்குகளுக்கான கட்டாய விற்பனை ஒப்புதலுடன் வருவதால் ITD சிமென்டேஷன் இந்தியா நிறுவனத்தில் சுமார் 73 சதவீதம் வரையிலான பங்குகளைக் கைப்பற்றும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்து ITD சிமென்டேஷன் இயங்கி வருகிறது, EPC பிரிவில் இயங்கி வரும் இந்நிறுவனம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வேர்களை கொண்டு, இந்தியாவில் பல கைகளுக்கு மாறி இன்றும் இயக்கி வருகிறது.
ITD சிமென்டேஷன் நிறுவனத்தின் ப்ரோமோட்டராக இருப்பது இத்தாலியன்-தாய் டெவலப்மென்ட் பப்ளிக் கோ., ஜூன் மாத முடிவில் சுமார் 46.64 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஜூலை மாதம் இத்தாலியன்-தாய் டெவலப்மென்ட் பப்ளிக் நிறுவனம் ITD சிமென்டேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய தயார் என்றும், இதற்கான பையர்-ஐ தேடி வருவதாகவும் தெரிவித்தது.
ITD சிமென்டேஷன் இந்தியாவை அதானி குழுமம் கையகப்படுத்துவது, உலகளாவிய உள்கட்டமைப்பு தலைவராக மாறுவதற்கான அதன் இலக்கை அடைய முக்கிய படியாக இருக்கும். குறிப்பாக வெளிநாடுகளில் அடுத்தடுத்து உள்கட்டமைப்பு திட்டங்களைக் கையில் எடுக்கும் அதானி குழுமத்திற்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
ITD சிமென்டேஷன் இந்தியாவின் பங்குகளை வாங்க அதானி குழுமம், அபுதாபியின் முன்னணி தூர்வாரும் நிறுவனம் மற்றும் RPG குழுமத்தின் KEC இன்டர்நேஷனல் ஆகியவையும் போட்டிப்போட்டது, ஆனால் அதானி குழுமம் தற்போது விலையில் தள்ளுபடி கேட்கும் அளவிலான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருவதால் போட்டியில் முன்னோடியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ITD சிமென்டேஷன் நிறுவனத்தின் மதிப்பு ரூ.8,107 கோடி.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications