இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம், ஹிண்டர்பெர்க் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கின் தீர்ப்புகள் சாதகமாக அமைந்த அதே நேரத்தில் கௌதம் அதானி பல கடன்களை குறைத்த வேளையில் மீண்டும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் வேகமெடுத்துள்ளது அதானி குழுமம்.
இந்த நிலையில் இந்தியாவில் துறைமுக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதான் போர்ட்ஸ் நிறுவனம் கிழக்கு கடற்கரையில் தனது செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில், ஒடிசாவின் கோபால்பூர் துறைமுகத்தில் 95 சதவீத பங்குகளை அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) நிறுவனம் சுமார் 1,349 கோடி ரூபாய்க்குக் கையகப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் இருக்கும் ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமத்தின் (SP Group) கட்டுப்பாட்டில் இருந்த 56 சதவீத கோபால்பூர் துறைமுக பங்குகளையும், ஒரிசா ஸ்டீவிடோர்ஸ் நிறுவனத்திடம் இருந்த 39 சதவீத கோபால்பூர் துறைமுக பங்குகளையும் அதானி போர்ட்ஸ் நிறுவனம் வாங்குகிறது.
அதானி போர்ட்ஸ் மற்றும் ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம் - ஒரிசா ஸ்டீவிடோர்ஸ் மத்தியில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் கோபால்பூர் துறைமுகம் சுமார் 3080 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் பங்குகள் கைமாற உள்ளது. கோபால்பூர் துறைமுகம் இரும்பு தாது, நிலக்கரி, சுண்ணாம்பு, இல்மனைட் மற்றும் அலுமினா போன்ற பல்வேறு வகையான உலர் சரக்குகளைக் கையாள்கிறது.
2023 நிதியாண்டில், கோபால்பூர் துறைமுகம் 7.4 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) சரக்குகளை கையாண்டது, இத்துறைமுகத்தின் மொத்தக் கொள்ளளவு 20 MMT ஆகும். நடப்பு நிதிய ஆண்டில், 11.3 MMT சரக்குகளை கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் கோபால்பூர் துறைமுகம் இந்த ஆண்டு 520 கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்ரேட்டிங் வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அதானி போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு கடற்கரை இடையே சரக்கு போக்குவரத்தில் புதிய மாற்றத்தையும் வளர்ச்சியை கொண்டு வருவது தான் எங்களுடைய இலக்கு, இந்த இலக்கை எட்டும் வகையில் இந்த முக்கிய முதலீடு செய்யப்பட உள்ளதாக அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ தெரிவித்துள்ளது. கோபால்பூர் துறைமுகத்தின் இருப்பிடம் ஒடிசா என்றால் இதன் அருகில் உள்ள சுரங்க மையங்களை அடைய எளிதாக்கும் என்பதையும் அதானி துறைமுகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
அதானி துறைமுகங்கள் மற்றும் SEZ (APSEZ) நிறுவனம், இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் சுமார் 12 துறைமுகங்கள் மற்றும் முனையங்களை நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் தூத்துக்குடி voc துறைமுகத்தின் 4 மில்லியன் டன் கண்டெய்னர் முனையம் திட்டத்திற்கு அதானி போர்ட்ஸ் உட்பட 3 இந்திய நிறுவனங்களும், ஒரு சிங்கப்பூர் நிறுவனமும் விண்ணப்பம் கொடுத்துள்ளது.
மேலும் இந்தியாவில் தற்போது முக்கியமான முதலீடுகள் அனைத்தும் கிழக்கு இந்திய பக்கம் செல்வதால் அதானி குழுமத்தின் முதலீடுகள் பெரும் மாற்றத்தையும், வாய்ப்புகளைத் தரும். சமீபத்தில் டாடா குரூப், JSW குரூப் ஆகியவை அடுத்தடுத்து ஒடிஷா, அசாம் ஆகிய மாநிலத்தில் முதலீடுகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications