கௌதம் அதானி: நான் மட்டும் பிடிச்சு இருந்தா.. 'அந்த' ஸ்கூட்டர் பயணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கௌதம் அதானி-யின் அதிரடி வர்த்தக முடிவுகள் மூலம் அதானி குழுமம் சிறிய அளவிலிருந்து இன்பு டாடா, ரிலையன்ஸ் வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களைக் காட்டிலும் அதிக மதிப்புடைய வர்த்தகக் குழுமமாக மாறியுள்ளது.

 

கௌதம் அதானியின் வர்த்தக வாழ்க்கை குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் தினமும் எதாவது ஒரு செய்திகள் வந்துகொண்டு இருந்தாலும், 60 வயதான கௌதம் அதானி Aap Ki Adalat என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது அவருடைய பர்சனல் வாழ்க்கை குறித்து அதிகம் பேசினார் கௌதம் அதானி.

இந்தப் பேட்டியில் அவருடைய இளமை காலம், படிப்பு, மனைவியை முதல் முறையாகச் சந்தித்தது முதல் பிரதமர் மோடி உடனான நட்பு, வர்த்தகம், வளர்ச்சி, முதலீடுகள், கனவு திட்டம், அதானி குழுமத்தின் எதிர்காலம் எனப் பல விஷயங்களைப் பேசினார்.

இதில் முக்கியமாகக் கௌதம் அதானி முதல் முறையாக இந்த இண்டர்வியூவ்-ல் தனது குடும்ப, பேரப்பிள்ளைகள், பர்சனல் லைப் குறித்து அதிகம் பேசியுள்ளார்.

தினமும் ரம்மி.. மனைவி ப்ரீத்தி உடன் முதல் சந்திப்பு.. கௌதம் அதானி-யின் சுவாரஸ்யமான பர்சனல் லைப்..! தினமும் ரம்மி.. மனைவி ப்ரீத்தி உடன் முதல் சந்திப்பு.. கௌதம் அதானி-யின் சுவாரஸ்யமான பர்சனல் லைப்..!

கௌதம் அதானி

கௌதம் அதானி

கௌதம் அதானி தனது 15 வயதில் 10 வகுப்பை முடித்த பின்பு, குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கல்லூரி படிப்பை முடிக்க முடியாமல் வேலைக்குச் சேர வேண்டிய நிலை உருவானது, அதிலும் முக்கியமாகக் குஜராத்-ஐ விட்டு மும்பையில் பணியில் சேர வேண்டிய நிலை உருவானதாக இந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

கணக்குப் பாடம்

கணக்குப் பாடம்

நான் இன்ஜினியரிங்-ஐ டெக்னிக்கல் பாடமாக எடுத்தேன், நான் கணக்குப் பாடத்தில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று இருந்தேன், ஆனால் காலச் சூழ்நிலை படிப்பை தொடர முடியாமல் போனது. இளம் வயதிலேயே வியாபாரத்திற்கு வந்துவிட்டேன் எனத் தெரிவித்தார் கௌதம் அதானி.

நான் மட்டும் பிடிச்சு இருந்தா
 

நான் மட்டும் பிடிச்சு இருந்தா

கல்வி மிகவும் முக்கியம், இன்று படித்த தொழிலதிபர்களைப் பார்க்கும் போது வியக்க வைக்கிறது. இதேபோல் என்னுடைய கடின உழைப்பு, அனுபவம் உடன் கல்வியும் இருந்திருந்தால் தற்போது இருக்கும் நிலையை விடவும் சிறப்பாக இருந்திருப்பேன் எனக் கௌதம் அதானி கூறியுள்ளார்.

 

ஸ்கூட்டர் பயணம்

ஸ்கூட்டர் பயணம்

இன்று கௌதம் அதானி கார், பங்களா என இருந்தாலும் தான் ஒரு காலத்தில் ஸ்கூட்டரில் பயணித்தவன், ஆனால் இன்று பிரைவேட் ஜெட் விமானத்தில் பறக்கிறேன். இதனால் அனைத்துத் தரப்பு மக்களின் Mindset-ம் எனக்குப் புரியும். பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் இருந்து வந்த காரணத்தால் விமானத்தில் பறந்தாலும் தன்னடக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதானி குழுமம்

அதானி குழுமம்

இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருந்து கௌதம் அதானி மற்றும் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்தைக் கைப்பற்றியதில் உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியல்

உலகப் பணக்காரர்கள் பட்டியல்


இதைவிட முக்கியமாக 2021, 2022 ஆம் ஆண்டில் கௌதம் அதானி சொத்து மதிப்பு தாறுமாறாக வளர்ச்சி அடைந்தது மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளியது மட்டும் அல்லாமல் 2வது இடம் வரையில் முன்னேறினார்.

புகழ் விண்ணைத் தொட்டது

புகழ் விண்ணைத் தொட்டது

இதன் மூலம் உலகப் பணக்காரர்கள், அரசு அமைப்புகள், முதலீட்டாளர்கள், பெரும் வங்கிகள், அரசியல் தலைவர் வரையில் கௌதம் அதானியின் புகழ் விண்ணைத் தொட்டது. இதோடு நிற்காமல் தொடர்ந்து நிறுவனங்களைக் கைப்பற்றுவது, வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது என மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது அதானி குழுமம்.

முகேஷ் அம்பானி வாங்கிய புதிய வீடு.. விலை எம்புட்டு தெரியுமா? முகேஷ் அம்பானி வாங்கிய புதிய வீடு.. விலை எம்புட்டு தெரியுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gautam Adani calls him misfortune for not having an education; Gautam Adani used travel on scooter

Gautam Adani call him misfortune for not having an education; Gautam Adani used to travel by scooter. Along with education and with this hard work and experience, he would have become much bigger than what's right as Gautam Adani.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X