அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கௌதம் அதானி, இந்தியாவில் பல விமான நிலையங்களை கைப்பற்றி பெரும் வர்த்தகத்தை இத்துறையில் கொண்டு உள்ளார். இந்த நிலையில் விமான துறையில் அதானி குழுமத்தின் சேவை திறன்களை அதிகரிக்கும் நோக்கில் புதிய கூட்டணி அமைப்பதற்கான முக்கிய கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
விமான தயாரிப்பிலும் சேவையிலும் முடி சூடா மன்னனாக இருக்கும் பாம்பார்டியர் நிறுவனத்தின் சிஇஓ எரிக் மார்டெல் உடன் செவ்வாய்க்கிழமை அன்று கௌதம் அதானி தலைமையில் உயர்மட்ட கூட்டத்தை நடத்தினார்.

கௌதம் அதானி-யின் டிவிட்டர் பதிவின்படி, எரிக் மார்டெல் உடனான கூட்டத்தில் விமானச் சேவைகள், பராமரிப்பு, பழுதுபார்ப்பு, திருத்தம் (MRO) மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
பாம்பார்டியர் கனடா நாட்டின் முன்னணி பிஸ்னஸ் ஜெட் தயாரிப்பு நிறுவனமாகும். விமான தயாரிப்பு மற்றும் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வர்த்தக சாம்ராஜ்ஜியம். பாம்பார்டியர் விமானங்களை உலகளவில் ராணுவ மற்றும் அரசுகளும், பெரும் பணக்காரர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதானி குழுமம் விமான நிலைய சேவைகளை மட்டுமே அளித்து வரும் நிலையில், விமானங்களுக்கான துணை சேவைகளையும் அளிக்க தயாராகி வருகிறது. இத்தகைய சேவைக்காக, தற்போது அனைத்து விமான நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களையே நம்பியிருக்கிறது.
இந்த நிலையில் MRO சேவையில் "ஆத்மநிர்பர பாரத்" திட்டத்திற்கு இணங்க வெளிநாட்டுத் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை சார்ந்திருப்பதைக் குறைக்கும் இலக்குடன், அதானி குழுமம் பாம்பார்டியர் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டணியில் சேவை அளிக்கும் முயற்சியில் தான் இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது.
எரிக் மார்டெல் - கௌதம் அதானி சந்திப்பு இந்தியாவின் விமானத் துறையில் ஒரு முக்கிய வளர்ச்சியாகும். வெளிநாட்டு MRO சேவைகளை சார்ந்திருப்பதை குறைக்கும் இலக்குடன் அதானி, உள்ளூர் MRO துறையை உருவாக்கி இதில் பெரும் ஆதிக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இது இந்திய விமான சேவை துறைக்கு எந்த வகையில் லாபம் அளிக்கும், என்றால், விமான இயக்கத்தில் அதிகப்படியான செலவுகளை ஈர்க்கும் ஒன்றில் MRO மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், இச்சேவையை உள்நாட்டு நிறுவனங்கள் அளித்தால் விமான சேவைகளுக்கான செயல்பாட்டுச் செலவுகளைக் குறைத்து, திருப்ப பயன்பாட்டுக்கு வரும் விமானத்தின் நேரத்தை குறைக்க முடியும். இது பெரிய அளவிலான வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியாவை விமான பராமரிப்பு மற்றும் சேவைகளுக்கான புதிய ஹப் ஆக மாறக்கூடும்.
அதானி குழுமத்தின் துணை நிறுவனமான, அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விமான துறைகளில் தனது இருப்பிடத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. விமான நிலைய சேவைகளில் இருந்து விமானங்களுக்கான சேவை வரையில் தற்போது நீட்டிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதானி டிபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏற்கனவே இத்துறையில் அட்வான்ஸ் டெக்னாலஜிஸ்யில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்து, தனித்துவமான தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பல்வேறு உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications