இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் தான் உள்ளது என தீவிரமாக நம்பப்படும் வேளையில், இத்துறையில் பெரிய அனுபவம் இல்லாத இந்தியாவால் இதில் எப்படி புதிய உச்சத்தை எட்ட முடியும் என்று குழம்பிக்கொண்டு இருக்கும் போது தான் மத்திய அரசு செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே கிளாஸ் ஆகிய பிரிவுக்கு PLI திட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை மத்திய அரசு 5 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, இதில் 4 திட்டங்கள் OSAT தொழிற்சாலைக்காகவும், ஒரு திட்டம் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பதற்கு மிகவும் முக்கியமான ஃபேரிகேஷன் தொழிற்சாலை அமைக்கும் திட்டம்.இதைத் தொடர்ந்து இந்தியாவில் 2வது ஃபேப்ரிகேஷன் திட்டம் அமைக்க அதானி குழுமம் களத்தில் இறங்கியுள்ளது.

மகாராஷ்டிராவின் அமைச்சரவை கூட்டத்தில் அதானி குழுமம் மற்றும் இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் கூட்டணி இணைந்து நிறுவும் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை, மும்பையின் பன்வேல் பகுதியில் சுமார் ரூ.83,947 கோடி (10 பில்லியன் டாலர்) முதலீட்டில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக இம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் டிவிட்டரில் தெரிவித்தார்.
ஆனால் இந்த தொழிற்சாலைக்கு மானியம் பெற வேண்டுமாயின் மத்திய அரசின் இந்திய செமிகண்டக்டர் மிஷன் (ISM) PLI திட்டத்திலிருந்து ஒப்புதல் பெற வேண்டும். மானியம் அவசியமில்லை எனில் இக்கூட்டணி நிறுவனங்கள் தங்களுடைய சொந்த முதலீட்டிலும் அமைக்க முடியும். மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் இந்தியாவில் இத்துறையில் தொழிற்சாலை அமைக்க கிட்டத்தட்ட 1.5 வருடமாக பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இந்த முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் வேளையில் கௌதம் அதானி உதவியுடன் இந்த முறை களத்தில் இறங்கியுள்ளது.
இந்த 10 பில்லியன் டாலர் தொழிற்சாலை இரண்டு கட்டங்களில் செயல்படுத்தப்படும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்தார். முதல் கட்டத்தில் ரூ.58,763 கோடி முதலீடு செய்யப்பட்டு, மாதந்தோறும் 40,000 சில்லிக்கான ஃவேபர்களை உற்பத்தி செய்யப்படும். 2ஆம் கட்டத்தில் ரூ.25,184 கோடி முதலீட்டில் ஆலையின் மொத்த ஃவேபர் உற்பத்தி திறன் மாதாந்திர அளவில் 80,000 ஆக அதிகரிக்கும்.
இந்த தொழிற்சாலையில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழிற்சாலை பல்வேறு தொழில்கள் மற்றும் நிறுவனங்களை ஏற்கனவே செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (MIDC) தலோஜா தொழில்துறை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு பிப்ரவரியில் டாடா குழுமம் தைவான் நாட்டின் PSMC கூட்டணியில் குஜராத்தில் தோலேரா பகுதியில் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலை அமைக்க ஒப்புதல் அளித்தது. இது தான் இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலையாகும்.
இதை தொடர்ந்து டவர்-அதானி தொழிற்சாலைக்கு ஒப்புதல் அளித்தால் 2வது நிறுவனமாக இருக்கும். ISM - PLI திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டால், இது நாட்டின் ஆறாவது செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையாக இருக்கும். அதானி-க்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்குமா என்ன..?
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications