அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி சில வாரங்களுக்கு முன்பு 125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராகவும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விரைவில் முன்னேறி வியப்பு அளித்து வந்தார்.
ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நாளில் இருந்து அதானி பங்குகள் மீதான முதலீடுகள் குறைந்தது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அதானி பங்குகள் மதிப்பும், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பும் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.
பெரும் பணக்காரர்கள்
பொதுவாக உலகின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அவர்களின் முதலீடு அல்லது அவர்களது சொந்த நிறுவனத்தின் பங்கு இருப்பு அதிகப்படியான இடத்தை ஆட்கொள்ளும் காரணத்தால் பங்கு விலை உயர்வும், சரிவும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் 3வது இடத்தில் இருந்த கௌதம் அதானி தற்போது 27வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிக்கை
போர்ப்ஸ் பத்திரிக்கை அதானி குழுமம் செய்த குளறுபடிகளைச் சில நாட்களுக்கு முன்பு செய்தியாக வெளியிட்டது, இதில் முக்கியமான கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி ரஷ்ய வங்கியின் வாங்கி 240 மில்லியன் டாலர் கடன் தொகையை வைத்து மறைமுகமாக அதானி குழு பங்குகளை வாங்கிப் பொதுச் சந்தையில் இருந்து தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்தார் என்பதைத் தெரிவித்தது.
விக்கிபீடியா பக்க திருத்தம்
இந்தச் செய்தி பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் நேற்று மாலை விக்கிபீடியா பக்கத்தில் அதானி குழுமத்தில் இருந்துக்கொண்டே அதானி குழு ஊழியர்கள் கௌதம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், அதானி குழும நிறுவனத்தில் விக்கிபீடியா பக்கத்தில் நடுநிலையற்ற தகவல்களைப் பதிவேற்றம் செய்தும், திருத்தியும் உள்ளதாகக் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது.
46 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்குப் பின்பு பல பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கும் அதானி குழுமம் சுமார் 134 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை இழந்தது, இதனால் கௌதம் அதானி சொத்து மதிப்பு என்பது பெரும் 120-125 பில்லியன் டாலர் உச்சத்தில் இருந்து வெறும் 46 பில்லியன் டாலர் உடன் போர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 27-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
98 பில்லியன் டாலர்
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 8.09 லட்சம் கோடி அதாவது 100 பில்லியன் டாலர் என்ற முக்கியப் பென்ச்மார்க் அளவீட்டை தாண்டி தற்போது வெறும் 98 பில்லியன் டாலராக இருந்தது.
10 நிறுவனங்கள்
இந்த 10 நிறுவனத்தில் அதிகப்படியான பாதிப்பு எதிர்கொண்டது அதானி டேட்டல் கேஸ் நிறுவனம் தான் ஜனவரி 24 ஆம் தேதிக்கு பின்பு இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3.30 லட்சம் கோடி ரூபாய் மாயமாகியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்
இதேபோல் அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி தலா 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது. அதானி பவர் மற்றும் அதானி போர்ட்ஸ் 40000 கோடி ரூபாய் அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications