இந்தியாவின் 2வது பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானியின் குடும்பம் முதலீட்டு நிறுவனம், அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.6,661 கோடி புதிய மூலதன முதலீட்டை செய்து, இந்நிறுவனத்தில் தங்களது பங்கு இருப்பை 3.6 சதவீதம் அதிகரித்து 66.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் நிர்வாக குழுவில் கூடுதல் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.
இந்தியாவின் உள்கட்டமைப்பு துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் சிமெண்ட் தேவை நாளுக்கு நாள் வருகிறது. இந்த தேவையைப் பூர்த்தி செய்வதில் அதானி சிமெண்ட் முக்கிய பங்காற்றும். இதேவேளையில் தென்னிந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியிலும், விநியோகத்தில் இறங்க அதானி குழுமம் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறுவனத்தின் இயக்குநர் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வாரண்ட்டுகளை செயல்படுத்தியதன் வாயிலாக ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டது என்பதைத் தொடர்ந்து, தற்போது ரூ.6,661 கோடி முதலீடு செய்து 3.6 சதவீத பங்குகள் பெறப்பட்டது என தெரிய வந்துள்ளது.
இந்த மூலதன உட்செலுத்துதல் மூலம் 2028 ஆம் ஆண்டுக்குள் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் வருடாந்திர உற்பத்தி திறனை 140 மில்லியன் டன் ஆக உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
மேலும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான தடை நீக்க மூலதனச் செலவுகளை (Debottlenecking CAPEX) மேற்கொள்வது, விரிவாக்கத்தை உறுதி செய்வது, வளங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி முழுவதும் திறனை மேம்படுத்துவது, இத்துறையில் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவது என பல முயற்சிகளுக்கு உதவும் என்று அம்புஜா சிமெண்ட் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 1.91 சதவீதம் உயர்ந்து அதன் பங்கு விலை 613 ரூபாயாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த பங்கின் விலை இரட்டிப்பு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஹோல்சிம் குழுமத்திடம் இருந்து அம்புஜா சிமெண்ட் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏசிசி ஆகிய இரு நிறுவனங்களைக் கைப்பற்றியதன் மூலம் அதானி குழுமம் 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக சிமெண்ட் தயாரிப்பில் இறங்கினார்.
இந்த வாரம் இந்தியாவில் துறைமுக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதான் போர்ட்ஸ் நிறுவனம் கிழக்கு கடற்கரையில் தனது செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில், ஒடிசாவின் கோபால்பூர் துறைமுகத்தில் 95 சதவீத பங்குகளை அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) நிறுவனம் சுமார் 1,349 கோடி ரூபாய்க்குக் கையகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு இந்திய போட்டி ஆணையம் (CCI) செவ்வாய்க்கிழமை அன்று அதானி பவர் நிறுவனம் கடனில் மூழ்கி திவாலான லாங்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications